சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்.. ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்.கூட்டு அறிக்கை..!

Google Oneindia Tamil News

சென்னை: வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பணியில் அமைச்சர்கள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,

ops, eps, joint statement about voters list

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும், அது கடந்த 1-ம் தேதி தொடங்கி இம்மாதம் இறுதி வரை நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைதான் வேண்டும்.. கேட்டு வாங்கிய ரஷ்யா.. கையெழுத்தானது சூப்பர் ஒப்பந்தம்.. அடித்தது லக்!சென்னைதான் வேண்டும்.. கேட்டு வாங்கிய ரஷ்யா.. கையெழுத்தானது சூப்பர் ஒப்பந்தம்.. அடித்தது லக்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொதுசேவை மையங்கள், அரசு கேபிள் தொலைக்காட்சியின் இ-சேவை மையங்கள், முதலானவற்றில் வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், அந்த வகையில் இந்தப் பணியில் அமைச்சர்கள் தொடங்கி கிளைக்கழக நிர்வாகிகள் வரையிலான அனைத்து அதிமுக நிர்வாகிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்ட்டுள்ளது.

வாக்காளர் சரிபார்த்தல் பணியில் கிளை, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள் ஆற்றிய பணி விவரங்களை மாவட்டச்செயலாளர்கள் மூலம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
ops, eps, joint statement about voters list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X