ஆங்.. அதெல்லாம் பரமரகசியம்னு சொன்ன ஓபிஎஸ்.. அப்போ அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு?.. டென்ஷனில் இபிஎஸ்
சென்னை: எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்து யாரெல்லாம் எங்கள் அணிக்கு வருவார்கள் என்பது பரமரகசியம் என ஓபிஎஸ் கூறியதை பார்த்தால் இனி யாரெல்லாம் எடப்பாடியை விட்டு வர போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தாலும் இருவரும் சேர்ந்து பொதுக் குழு கூட்டத்தை கூட்டலாம் என தீர்ப்பு வந்துள்ளதால் ஓபிஎஸ் அணி சற்று ஜெர்க் ஆகியுள்ளது.
ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி பொதுக் குழு கூட்டத்தை கூட்டச் சொல்லி அதில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது சிக்கலை தரும் என்பதால் அப்படியே பொதுக் குழுவை கூட்டினாலும் எதுவும் நடக்காத வண்ணம் பார்த்து கொள்ள ஓபிஎஸ் தரப்பு சில வேலைகளில் இறங்கியுள்ளதாம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏக்களையும் பொதுக் குழு உறுப்பினர்களையும் தங்கள் பக்கம் ஈர்க்க ஓபிஎஸ் பிளான் செய்து வருகிறாராம். இதன்படிதான் மிகப் பெரிய தூண்டிலை போட்டு அதில் எந்த மீன் சிக்குகிறதோ அந்த மீன்களை ஓபிஎஸ் தன் வசமாக்கி வருகிறாராம்.

பாக்யராஜ்
அண்மையில் பாஜகவிலிருந்து விலகிய பாக்யராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தருவதாகவும் இரு அணிகளையும் எடப்பாடி பழனிசாமியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்த ஐயப்பன் சென்னையில் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் பேச்சு
இந்த நிகழ்வில் ஓபிஎஸ் பேசுகையில் எங்களுடைய எண்ணம் செயல் எல்லாம் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதாகும். அதுவே தொண்டர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. அனைத்து அதிமுக தொண்டர்களும் இணைந்து செயல்பட வேண்டும். பொதுக் குழு என்ற பெயரில் அவர்கள் நடத்திய நாடகத்தால் தொண்டர்கள் அனைவரும் தற்போது ஒன்றாக இணைய வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

எம்ஜிஆர் ஜெயலலிதா
எம்ஜிஆர், ஜெயலலிதாவால் ஏழை எளிய மக்களுக்காக நலன் காக்க உருவாக்கப்பட்ட அதிமுகவில் நாங்களும் அந்த இலக்கை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் தொண்டரகள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதிமுகவின் இணைப்பை வலியுறுத்தி மாவட்டந்தோறும் புரட்சிப் பயணம் தொடரும். இதில் இன்னும் எங்களோடு யார் யார் வருவார்கள் என்பது பரமரகசியம் என தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டி எம்எல்ஏ
உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பனும் "என்னை போன்று மற்ற எம்எல்ஏக்களும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றார்கள். தற்போது ஓபிஎஸ் பக்கம் இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தினகரனையும் சசிகலாவையும் நேரில் சந்தித்து அதிமுகவுக்கு அழைப்பேன் என ஓபிஎஸ் சொல்லியுள்ளார்.

அடுத்த விக்கெட் யாரு
ஓபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு உள்ள மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளவர்களை தன் பக்கம் இழுக்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார்கள். அடுத்து எடப்பாடி பழனிசாமியின் வலது கரத்தை இழுக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவ்வாறு எம்எல்ஏக்களை இழுப்பதன் மூலம் தங்கள் பக்கம் இருக்கும் எம்எல்ஏக்களின் ஆதரவை வைத்தும் அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சில முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது என்பதால் ஓபிஎஸ் தரப்பு ஆட்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறதாம். எனவே அடுத்து எந்த எம்எல்ஏ ஓபிஎஸ் பக்கம் தாவ போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
