போடி தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ்? ஆண்டிப்பட்டியில் ஓ.பி.ரவீந்திரநாத்.. அறிவாலயத்தில் விருப்ப மனு!
சென்னை: திமுக சார்பாக போடி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிட அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு கொடுத்துள்ளார். அதேபோல் தனக்காக போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய 3 தொகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வந்தனர். ஆனால் சட்டசபைத் தேர்தல் நெருங்கியதால், ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக, அதிமுக மற்றும் தவெக பக்கம் சென்றனர். இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்டியணைத்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். இதனையடுத்து நாளை தனது ஆதரவாளர்களின் இணைப்பு விழாவிற்காக திருமங்கலத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளை ஓபிஎஸ் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக சார்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் நாள் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கம்பம், போடி, ஆண்டிப்பட்டி ஆகிய 3 தொகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். அதேபோல் ஓபிஎஸ் சார்பாக போடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.
அதேபோல் தனக்கான ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்துள்ளார். இதனால் இம்முறை திமுக சார்பாக போடியில் ஓபிஎஸ் களமிறங்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. கடந்த முறை தேனி மாவட்டத்தின் 3 தொகுதிகளில் திமுக வென்ற போதும், போடி தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். முக்குலத்தோர் சமூக மக்கள் மற்றும் ஓபிஎஸ்ஸின் சொந்தங்கள் அதிகமிருக்கும் தொகுதியாகும்.
இதனால் திமுக சார்பாக போட்டியிட்டாலும் ஓபிஎஸ் வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் கணிசமாக திமுக பக்கம் ஓபிஎஸ் திருப்புவார் என்றும் கருதப்படுகிறது. அதற்கான டிரைய்லராக நாளைய இணைப்பு விழா இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications