திமுகவில் ஓபிஎஸ் இணைப்பு! வைத்திலிங்கத்திடம் சொன்னது என்ன? பன்னீர் செல்வத்தின் மாஸ்டர் பிளான்?
சென்னை: திமுகவில் ஓபிஎஸ் இணைந்துள்ளது எதேச்சையாக நடந்தது அல்ல என்றும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணத்தையும் அவர்கள் சொல்கிறார்கள்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸுடன் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், குன்னம் ராமசந்திரன், ஐயப்பன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பக்கபலமாக இருந்தனர்.

இவர்கள் அனைவரும் அதிமுகவை எப்படியும் மீட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். அது போல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருந்தனர்.
செங்கோட்டையன்
இது போதாதென, ஒருங்கிணைந்த அதிமுக என கோரி வந்த செங்கோட்டையனும் தேவர் ஜெயந்தி அன்று ஓபிஎஸ்ஸுடன் ஒரே காரில் பயணித்திருந்தார். அப்போது கூட ஒருங்கிணைந்த அதிமுக குறித்து அவர்கள் பேசியதாக சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ்
இதனால் அதிமுகவில் நாம் ஒரு முக்கிய பதவிக்கு வந்துவிடலாம் என ஓபிஎஸ் எண்ணியிருந்த நிலையில்தான் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு அவர் தவெகவில் இணைந்தார்.
மனோஜ் பாண்டியன்
இதையடுத்து கூடவே இருந்த மனோஜ் பாண்டியனும் வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்துவிட்டனர். அவருடன் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமசந்திரனும் ஒதுங்கிவிட்டார். குன்னம் ராமசந்திரனும் ஓபிஎஸ் எந்த முடிவும் எடுக்காததால் திமுகவில் இணைய விருப்பம் இல்லாமல் அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார். டிடிவி தினகரனும் என்டிஏ கூட்டணிக்குச் சென்று அதிமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறார். சசிகலாவும் தனிக்கட்சி தொடங்கிவிட்டார்.
தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ்
இதையடுத்து தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ், எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் அல்லது எந்த கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பாஜக கூட்டணிக்கு செல்வார் என்றும் அவருக்கு ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநர் பதவி கொடுக்கப்படும் என்றெல்லாம் லாஜிக் இல்லாத விஷயங்கள் பேசப்பட்டன.
பாஜக விமர்சனம்
இந்த நிலையில் நேற்றைய தினம் ஓபிஎஸ், திடீரென திமுகவில் இணைந்துவிட்டார். இவரது இந்த இணைப்பை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ்ஸின் திமுக இணைப்பு எதேச்சையாக நடந்ததா இல்ல திட்டமிட்டு நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், பாஜக கூட்டணிக்கு ஓபிஎஸ்ஸால் செல்ல முடியவில்லை. அங்கு சென்றால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும். அது போல் வாக்கு வங்கியே என்னவென தெரியாத தவெகவுடன் கூட்டணிக்கு செல்லவும் ஓபிஎஸ்ஸுக்கு தயக்கம் இருந்தது.
வைத்திலிங்கத்தை அனுப்பியதே ஓபிஎஸ்தான்
இதனால் திமுகவில் சேரும் முடிவை எடுத்தார். ஆனால் முன் கூட்டியே சென்றால் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் என கருதிய ஓபிஎஸ், முதலில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை திமுகவுக்கு அனுப்பி வைத்தார். மேலும் சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வரை ஐயப்பன் எம்எல்ஏ புகழ்ந்து பேச சொன்னதும் ஓபிஎஸ்தான்.
திமுகவில் ஓபிஎஸ்
இதையடுத்து தனக்கும், தனது மகனுக்குமான முக்கியத்துவங்கள் குறித்து பேசிவிட்டு கடைசியாக ஓபிஎஸ் தனது மகன் ஓபி ரவீந்திரநாத்துடன் வந்து திமுகவில் இணைந்துவிட்டார் என்கிறார்கள்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications