சில்லு சில்லாய் சிதறிய ஆதரவாளர்கள்.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! ஓபிஎஸ்-ன் புதுக்கட்சி ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) சத்தமில்லாமல் புதிய அரசியல் கட்சியை தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுதொடர்பாக வரும் டிசம்பர் 23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கட்சியின் பெயரை முறைப்படி அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஓபிஎஸ் மிக அமைதியாக இருந்ததால், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர். அதனால் விரைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளதால் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், டிடிவி தினகரனைப் போல தனித்த அரசியல் பாதையை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

O Panneerselvam AIADMK politics

ஓ பன்னீர்செல்வம்

கடந்த மாதம் நடைபெற்ற 'அதிமுக உரிமை மீட்புக்குழு' மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இதுவரை குழுவாக செயல்பட்டு வந்த அவரது அமைப்பு இனி
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்" என்ற பெயரில் செயல்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓபிஎஸ் புதிய கட்சி

அந்த கூட்டத்தில், டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். ஆனால் அந்த கூட்டம் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் ஓபிஎஸ் டெல்லி சென்ற நிலையில், புதிய கட்சியை பதிவு செய்ய சென்றதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில், ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை மேலும் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதிமுக உரிமை மீட்புக்குழு

அந்த அறிக்கையின் லெட்டர் பேடில், இதுவரை பயன்படுத்தப்பட்ட 'உரிமை மீட்பு குழு' என்ற வார்த்தைக்கு பதிலாக 'உரிமை மீட்பு கழகம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கட்சி முகவரியும் பசுமை வழிச்சாலை என்ற பழைய முகவரிக்கு பதிலாக நந்தனம் முகவரி என மாற்றப்பட்டிருந்தது. இதன் மூலம், ஓபிஎஸ் ஏற்கெனவே புதுக்கட்சியை பதிவு செய்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

எம்.ஜி.ஆர் நினைவு தினம்

இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில், டிசம்பர் 23-ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திலேயே அல்லது அடுத்த நாள் வரும் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தன்று, ஓபிஎஸ் புதிய கட்சியை முறைப்படி அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், "கட்சி ஒன்றிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தடையாக உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தன்னை நம்பி வந்த தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு ஓபிஎஸுக்கு உள்ளது. ஓபிஎஸ் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்ததால், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் மாற்றுக் கட்சிகளுக்கு சென்று விட்டனர். மேலும், தற்போது ஓபிஎஸால் அதிமுகவின் கரை வேட்டியைக்கூட கட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தமிழக அரசியல்

அதனால், முந்தைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், குழு இனி கழகமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக டிசம்பர் 23-ம் தேதி நிர்வாகிகளுடன் விவாதித்து, ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்" என்று தெரிவித்தனர். ஓபிஎஸின் இந்த அரசியல் நகர்வு, அதிமுக அரசியலில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துமா?அல்லது பத்தோடு பதினொன்று என்ற ரீதியில் சென்றுவிடுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+