Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆமா, எடப்பாடிக்கு இந்த விஷயம் தெரியுமா? ஓபிஎஸ்ஸை தேடிய அந்த கண்.. துக்கவீட்டிலா இப்படி? என்ன நடக்குது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் வருமா? அல்லது இணக்கம் வருமா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவிவர, திடீரென ஒரு சீக்ரெட் சந்திப்பு நடந்துள்ளது.. யார் யாருக்கு தெரியுமா?

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் மீது, நிறைய பிரியமும், மரியாதையும் வைத்திருப்பவர் பிரதமர் மோடி.. ஏற்கனவே 3 முறை எம்பி சீட் தருவதாக சொல்லியும், அன்புடன் அதை மறுத்துவர் வாசன்.
ஆனால், இந்த முறை வாசனை கூட்டணிக்குள் கொண்டு வர மேலிட பாஜக விரும்புகிறது.. வாசனும் இதற்கு தயாராகி வருவதாகவும் தெரிகிறது. சமீபத்தில்கூட, பிரதமரை சந்தித்து பேசும்போது, தமிழக அரசியலை பற்றி வாசனிடம் கேட்டிருக்கிறார்.

OPS major strategies and and Why did TMC Leader GK Vasan meet O panneerselvam in Chennai

கான்செப்ட்: அதற்கு வாசன், "இந்த முறை தமிழகத்தில் 20 முதல் 25 இடங்களை நம் கூட்டணி கைப்பற்றும் என தகவல்கள் கிடைக்கின்றன.. பண பலமும் அதிகார பலமும் இருக்கிற துணிச்சலில் திமுக தலைமை இருக்குது. ஒவ்வொரு ஓட்டுக்கும் முந்தைய தேர்தலைவிட, பணத்தை அதிகமா கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்கிறாங்க. ஆனால், மக்கள் அப்படி நினைக்கலை. அதிருப்தியிலதான் இருக்காங்க.

பண விளையாட்டு: திமுகவின் பண விளையாட்டை முடக்கினாலே போதும்... மக்கள் நியாயமா யோசிச்சு ஓட்டுப்போடுவாங்க. தமிழக களம் நமக்கு சாதகமாக இருக்கிறது. ஆனா, ஆளும் கட்சியின் அதிகாரமும் பணமும் அதை மாத்திடக்கூடாது" என்று பிரதமரிடம் சொன்னாராம் வாசன். இதனை ஆமோதிக்கும் வகையில் வாசனின் முதுகில் தட்டிக்கொடுத்தாராம் மோடி.

இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென அதிமுக - தமிழக பாஜகவுக்கு இடையேயான மோதல் வெடித்து கிளம்பியது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று ஜெயக்குமாரும் அறிவித்திருந்தார். அன்று ஜெயக்குமார் இப்படி சொன்னதுமே, ஒரு டிவி சேனலுக்கு வாசன் பேட்டி தந்திருந்தார்.

அதில், "இந்த கூட்டணி மக்களின் நம்பிக்கையை பெற்று, வெற்றி பெறக்கூடிய நல்ல வாய்ப்பு தேர்தலிலேயே இருக்கிறது.. கூட்டணியில் கருத்து வேறுபாடு என்பது புதிதல்ல.. "இந்தியா" கூட்டணியை, முழுமையான கூட்டணி என்று சொல்ல முடியுமா? பஞ்சாப், டெல்லியில், காங்கிரஸ் ஒத்த கருத்துடன் இருக்கிறதா? சிபிஎம் ஏன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? அதுபோலதான் பாஜகவும், அதிமுகவும்.. விரைவில் கருத்து வேறுபாடு களைந்து ஒன்றிணைவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

வாசன்: அதாவது, அதிமுக - பாஜக கூட்டணியை விட்டுக்கொடுக்காமல் வாசன் பேசி வரும்நிலையில், மற்றொருபக்கம் ஓபிஎஸ்ஸையும் விடாமல் இழுத்து பிடித்து வருவதாக தெரிகிறது.

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும் ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜேசிடி பிரபாகரனின் மனைவி திருமதி ஜெயந்திராணி சென்னையில் காலமானார். இதனால்,தேனியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்திருந்தார் அதேபோல, ஆற்காட்டில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார் ஜி.கே வாசன்.

ஓ.பன்னீர்செல்வம்: ஜே.சி.டி. பிரபாகரனின் மனைவி இறந்த தகவல் காலையிலேயே ஓபிஎஸ்சுக்கு தெரிவிக்கப்பட்டதாம்.. தகவல் அறிந்ததும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மதுரை வந்து அங்கிருந்து ஃப்ளைட் பிடித்து மதியம் சென்னைக்கு வந்துள்ளார்.. அதேபோல, ஜே.சி.டி.பிரபாகரன் மனைவி இறந்த தகவல், ஆற்காட்டில் இருந்த வாசனுக்கு தெரியவந்ததும், அவரும் உடனடியாக சென்னைக்கு கிளம்பத் தயாரானார்.

ஆனால், ஓபிஎஸ், மதியம்தான் துக்க வீட்டுக்கு வருகிறார் என்பதை தெரிந்துகொண்ட வாசன், ஆற்காட்டில் இருந்து உடனடியாக கிளம்பவில்லையாம்.. ஓபிஎஸ் வருகிற நேரத்தை கணக்கிட்டு, அதற்கு பிறகே ஆற்காட்டில் இருந்து புறப்பட்டாராம்.. துக்க வீட்டுக்கு ஓபிஎஸ் வந்துவிட்டார் என்று தெரிந்ததும்தான், வாசன் துக்க வீட்டுக்கே சென்றிருக்கிறார்.

வாசன் ஆறுதல்: அதாவது, ஓபிஎஸ்சை சந்திக்க நினைத்ததால் ஓபிஎஸ்சின் வருகையின்போது, அங்கிருக்க வாசன் விரும்பியிருக்கிறார்... பிரபாகரனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, பிறகு ஓபிஎஸ்சுடன் பேச ஆரம்பித்து விட்டாராம் வாசன். சுமார் 30 நிமிடங்கள் இருவரும் விவாதித்து கொண்டார்களாம்.

வாசனை பார்த்ததுமே, அங்கிருந்த அதிமுகவினரோ, "இவர் எடப்பாடி ஆள் ஆச்சே, இங்கே எதற்கு வந்தார்? அணி மாறுகிறாரா?" என்று வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்களாம்.. இதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

அதாவது, எடப்பாடி பழனிசாமி மீது மோடி, அமித்ஷா இருவரும் செம காட்டத்தில் இருக்கிறார்களாம்.. ஓபிஎஸ்ஸை அவர்கள் கைவிடவில்லை என்றும், அதிமுக கூட்டணி முறிந்து பாஜக தலைமையில் ஒரு அணி கட்டமைக்கப்பட்டால் அதில் ஓபிஎஸ் முக்கிய பங்களிப்பார் என்றும் அரசியல் ரீதியாக பல தகவல்களை அறிந்து கொண்டதாலே, ஓபிஎஸ்சை சந்திக்க வேண்டி இந்த துக்க வீட்டுக்கு வந்தாராம் வாசன்..

சமரச முடிவு: அமித்ஷா எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு மற்றும் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஆகியவை பற்றி வாசனும், ஓபிஎஸ்ஸும் பேசிக்கொண்டார்களாம். "ஒன்றிணைந்த அதிமுகவை" விரும்பும் தலைவர்களில் மிக முக்கியமானவர் தமாகா தலைவர் வாசன்.. அதனால், ஓபிஎஸ்ஸுடனான இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+