OPS: ஸ்டாலினின் தரமான மூவ் இது.. தென் மாவட்டத்தில் என்டிஏ காலியாக போகுது.. தராசு ஷ்யாம் கருத்து
சென்னை: திமுகவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இணைந்திருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக முதல்வர் ஸ்டாலினின் தரமான மூவ் என்று கூறிய தராசு ஷ்யாம், தென் மாவட்டங்களில் என்டிஏ கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பாக தமிழ்நாட்டின் 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ்ஸை, ஆரத்தழுவி திமுக கரை கொண்ட சால்வை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். முக்குலத்தோர் சமூக பிரதிநிதியாக பார்க்கப்படும் ஓபிஎஸ், திமுகவில் இணைந்திருப்பது தென் மாவட்டங்களில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தராசு ஷ்யாம் கருத்து
அதுமுக - பாஜக கூட்டணியில் இணைய ஓபிஎஸ் எவ்வளவோ முயற்சித்த போதும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக ஓபிஎஸ் திமுக பக்கம் வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், முதல்வர் ஸ்டாலினின் ஸ்மார்ட் மூவ் இது.. 3 முறை முதல்வராக இருந்தவரை கட்சியில் இணைய வைக்க அரசியல் சாதுர்யம் வேண்டும்.
ஸ்டானினின் இமேஜ்
ஏனென்றால் கட்சிக்காரர்களையும் திருப்திபடுத்த வேண்டும்.. ஓபிஎஸ்ஸையும் மகிழ்ச்சிபடுத்த வேண்டும்.. இங்குதான் ஸ்டாலினின் இமேஜ் உயர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இது அதிர்ச்சியாகவே இருக்கும்.. ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்று சொல்லப் போகிறார். அதேபோல் அதிமுகவுக்கு மிகப்பெரிய ஷாக்காக இருக்கும்.
ஓபிஎஸ் துணிச்சல் முடிவு
அண்ணாமலை நேற்று வரை ஓபிஎஸ் நல்லவர், வல்லவர்.. என்டிஏவில் இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார். ஓபிஎஸ்க்கு எதுவும் செய்ய மாட்டார்கள்.. ஆனால் ஓபிஎஸ் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. காலகாலத்திற்கும் அடிமையாகவே இருக்க வேண்டுமா என்ன.. இதனால் ஓபிஎஸ் எடுத்தது துணிச்சலான முடிவு தான்.. 1973ல் ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தார்.
கைவிட்ட பாஜக
அதன்பின் உச்சக்கட்ட பதவி வரை உயர்ந்தார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் ரீதியாக மிகப்பெரிய மைலேஜ்.. 1979ல் திமுக - அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற முயற்சி நடந்தது.. பிஜு பட்நாயக் முயற்சித்தார். அது நடந்துவிடும் என்று பலரும் நினைத்தோம்.. அது 2026ல் நடக்கும் என்று தெரிகிறது.. ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டுவிட்டது. பிரதமர் மோடியை பார்க்க கூட பாஜக அனுமதிக்கவில்லை.
என்டிஏ கூட்டணிக்கு பின்னடைவு
ஓபிஎஸ்ஸை பாஜக ஏமாற்றிவிட்டது. என்டிஏ கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.. தென் மாவட்டங்களில் பாஜக வாக்கு வங்கி அடிபடும். நயினார் நாகேந்திரன் வெல்வதே பெரிய விஷயம் தான்.. என்டிஏ கூட்டணி பலவீனம் அடைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்க வேண்டும். பாமகவும் பிளவுபட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications