புலி வருது புலி வருது கதை.. எடப்பாடியிடம் புஸ்ஸான அஸ்திரங்கள்! அதிமுகதொஉமீகு மா.செ.களை அழைத்த ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இது அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் அனைவரின் யோசனையாக இருக்கிறது.
அதிமுக என்றாலே ஜெயலலிதா தான் என்ற காலத்தில், ஜெயலலிதாவின் வலதுகரமாகவும் நம்பிக்கைகுரிய நபர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். எம்.எல்.ஏ.வான புதிதிலேயே முதலமைச்சராகவும் யோகமும் அவருக்கு இருந்தது.
ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் காபந்து முதல்வராக தமிழக அரசுக்கு தலைமைறேற்றவர். ஆனால் ஒருமுறை கூட முதலமைச்சர் என தனது வீட்டில் போர்டு கூட அவர் வைத்ததில்லை. அதனால் தான் ஜெயலலிதா தனக்கு அடுத்த இடத்தில் வைத்து ஓபிஎஸ்ஸை பார்த்தார். பரதன் எனவும் அவரை பாராட்டி இருந்தார்.

ஓ பன்னீர்செல்வம்
ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை தலைகீழானது. தற்போதைய சூழலில் அதிமுக கட்சி வேட்டியை கூட அவரால் கட்ட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெ., மறைந்தவுடன் இடைக்கால முதல்வராக பதவி ஏற்ற அவரை ராஜினாமா செய்ய வைத்தார் சசிகலா. இதனால் தர்மயுத்தத்தை தொடங்கினார். சசிகலாவும் சிறைக்குச் செல்ல நேரிட்டதால் திடீரென முதலமைச்சரானார் எடப்பாடி பழனிச்சாமி. பின்ன ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஓ.பன்னீர் செல்வத்துடன் கைகோர்த்தார். இதனால் டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி
பின்னர் அதிமுகவில் தன்னுடைய இருப்பை வலுவாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அடுத்தடுத்து தலைவர்களைப் பந்தாடினார். அதில் முக்கியமானவர் ஓ.பன்னீர்செல்வம். ஒற்றை தலைமை கோரிக்கையுடன் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து தூக்கி அடித்த நிலையில் சட்ட போராட்டங்கள் கைகொடுக்கவில்லை. இதை அடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் ஒருங்கிணைப்பாளராக தொடர்கிறார் ஓபிஎஸ். இடையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலையும் சந்தித்தார்.
பாஜக அதிமுக கூட்டணி
இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி உருவாகி இருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வமும் டிடிவி தினகரன். இதற்கிடையே செங்கோட்டையனும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் இவர்கள் மூவரும் ஒன்றாக பங்கேற்றது தமிழக அரசியலில் பேசு பொருளானது. இந்த நிலையில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர் ஒன்று சேர்ந்து அதிமுகவை கைப்பற்ற முயற்சி நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்
அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடி அளிக்கும் வகையில் அவர் தரப்பில் இருந்த மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மாவட்ட செயலாளர்கள் சிலரும் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வருகின்ற 24-ஆம் தேதி சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார் ஓபிஎஸ். இதில் அடுத்த கட்ட நடவடிக்கைகள், 2026 தேர்தலில் எதிர்கொள்வது எப்படி என பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
சசிகலா தினகரன்
குறிப்பாக சசிகலா டிடிவி செங்கோட்டையன் உள்ளிட்டோரை சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் கூறுகிறார்கள். சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலையில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டஹலில் தான் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இதே ஹோட்டலில் பலமுறை ஆலோசனை கூட்டங்களை நடத்திவிட்டார் ஓபிஎஸ். ஆனால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் திட்டம்
இந்த நிலையில் டிடிவி தினகரன் உடனான சந்திப்புக்கு பிறகு இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் அதிமுகவினரின் பார்வையாக இருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஓபிஎஸ் இணைந்து விடலாம் எனவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ 24 ஆம் தேதி பெரிய அளவிலான தாக்கம் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான மாற்றங்களாவது ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் நடக்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி












Click it and Unblock the Notifications