மோடி கூட்டத்திற்கு இதுவரை அழைப்பில்லை.. ஓரிரு நாட்களில் கூட்டணியை அறிவிப்பேன்.. ஓபிஎஸ் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனது தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜனவரி 23ல் சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு வரவில்லை என்று கூறிய ஓபிஎஸ், எந்தக் காலத்திலும் தனிக்கட்சி தொடங்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகத்தில் நடக்கவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாமக, தமாகா, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், அமமுக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

OPS Pressmeet

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரின் ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளரை அக்கட்சியின் தொண்டர்கள் தான் தேர்தல் மூலமாக தேர்வு செய்ய வேண்டும். இதனை யாரும் மாற்றக் கூடாது என்று எம்ஜிஆர் கொண்டு வந்தார். சாதாரண தொண்டர் கூட பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிடலாம். இப்போது அதிமுக சட்ட விதிகளை எடப்பாடி பழனிசாமி மாற்றி இருக்கிறார்.

இது உட்பட 6 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. தற்போது இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் சிவில் சூட்டில் நடந்து வருகிறது. தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். உறுதியாக வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, எனது தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பேன்.

பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இதுவரை எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக பக்கம் செல்வாரா அல்லது விஜய் பக்கம் செல்லும் முடிவை எடுப்பாரா என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+