அப்பாவு ரூமில் ஓபிஎஸ் சொன்ன 2 மேட்டர் இதுதான்.. விஷயம் பெருசா இருக்கே.. திமுக போடும் டபுள் கணக்கு
சென்னை: தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் தென்படுகிறது.. தேர்தல் நெருங்கும் நேரத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான கவனமும் அதிகரித்தபடியே வருகிறது.. இன்றைய தினம் தமிழக சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு அறையில் ஓபிஎஸ்ஸும், அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள்.. இந்த பேச்சின் சாராம்சம் என்ன? இதுகுறித்து சில தகவல்கள் பரபரத்து வருகின்றன..
ஓபிஎஸ் குறிப்பிட்ட விகிதத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வலுவாகவே இருந்து வந்தார்.. அதனால்தான் கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சையாக நின்று மூன்றரை லட்சம் வாக்குகளை அவரால் பெறவும் முடிந்தது..

இத்தனைக்கும் 20 நாளைக்கு முன்புதான் ஓபிஎஸ்ஸை வேட்பாளராக அறிவித்தார்கள்.. பலாப்பழம் சின்னமும் மக்களுக்கு அப்போது அறிமுகமில்லை.. எனினும் வெற்றி பெற்றிருந்தார்.. இதற்கு காரணம் ஓபிஎஸ் மீதான நம்பிக்கையை அவரது விசுவாசிகள் அதிகமாக வைத்திருந்ததுதான்.
ஓபிஎஸ் - தேய்மானம் முடிவு
ஆனால் நாளடைவில் ஓபிஎஸ்ஸின் அரசியல் தேய்மானத்தை அடைய தொடங்கியது.. விசுவாசிகளின் நம்பிக்கைகளும் சோர்வடைய தொடங்கிவிட்டன... உறுதியான & திடமான எந்த முடிவையும் எடுக்க முடியாத ஓபிஎஸ்ஸை கண்டு, ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் குழம்பித்தான் போனார்கள்..
இதையடுத்து, கடந்த சில வாரங்களாகவே அவரது ஆதரவாளர்களாக இருந்த முக்கிய எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி திமுகவில் இணைய துவங்கிவிட்டார்கள்.. எனவே எப்படியும் பன்னீர்செல்வமும் திமுகவில் இணையும் முடிவை எடுப்பார் என்று சலசலக்கப்பட்டு வருகிறது.
நிலைமை கட்டாயம்
அதுமட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் பேசுவதை, தவிர்க்க முடியாத சூழலில் தற்போது உள்ளார். அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஓபிஎஸ்ஸுக்கு இன்று அவசியமாக உள்ளது.
இன்றைய தினம் சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில், அமைச்சர் சேகர்பாபுவுடன் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ்.. இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது..
ஓபிஎஸ்ஸின் டிமாண்டு ரொம்ப சிம்பிள்...!!
திமுகவில் இணைவது பெரிய விஷயமல்ல, ஆனால் தன்னுடைய ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட வேண்டும், அத்துடன் தன்னுடைய மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா இடம் தரப்பட வேண்டும் என்ற இரு முக்கிய கோரிக்கையை ஓபிஎஸ் வைத்துள்ளாராம்..
இதற்கு திமுக தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டால், கண்ணை மூடிக்கொண்டு திமுகவில் இணையவும் ஓபிஎஸ் ரெடியாக உள்ளாராம்..
டபுள் கணக்கு போடும் திமுக
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால், 2026 தேர்தலில் தென்மாவட்டங்களிலும் சில வடமாவட்டங்களிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவை பலப்படுத்த தூண்டுகோலாக இருப்பார் என்று அறிவாலயம் தரப்பு நம்புகிறது.. மற்றொருபுறம் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைவதால், அதிமுகவிற்கு பெரும் இழப்பாக அமையும் என்றும் கணக்கு போடப்படுகின்றன.
செல்வாக்கு - மூலதனம்
இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் சொல்லும்போது, "தற்போதைய கூட்டணி சூழ்நிலையில், ஓபிஎஸ் கட்சி திமுகவிடம் வைக்கும் கோரிக்கைகள் தெளிவாகவும் வலுவானதாகவுமாக இருக்கின்றன.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் தனக்கிருக்கும் செல்வாக்கை மூலதனமாக்கி, முக்கிய மாவட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட அமைச்சகப் பொறுப்புகளைத் தனது வசமாக்கிக் கொள்வதிலேயே ஓபிஎஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
வெறும் சட்டமன்ற பிரதிநிதித்துவத்தோடு திருப்தியடையாமல், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக பொறுப்புகளிலும் தனது ஆதரவாளர்களுக்கு இடம் வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
இது அடிப்படையில், அரசு நிர்வாகத்தின் அதிகார மையத்தில் தனது பிடி நழுவிவிடக் கூடாது என்கிற அரசியல் தற்காப்பு உத்தியாகவே பார்க்கப்படுகிறது...
ஒருவேளை திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில், ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் தனது கட்சி ஒரு கவுரவமான பங்கை வகிக்க வேண்டும் என்பதும், கொள்கை முடிவுகளில் தனது குரல் ஒலிக்க வேண்டும் என்பதும் ஓபிஎஸ்ஸின் பிரதான நிபந்தனைகளாக உள்ளன" என்கிறார்கள்.
ஓபிஎஸ் முன்வைத்துள்ளதாக சொல்லப்படும் 2 விதமான கோரிக்கைகளை அறிவாலயம் நிறைவேற்றுமா? பச்சை கொடி காட்டுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications