குடும்ப ஆதிக்கத்தை தலைதூக்க விடமாட்டோம்... சசிகலாவுக்கு செக் வைத்த உறுதிமொழி
சென்னை: அதிமுகவில் தனியொரு குடும்பத்தின் ஆதிக்கத்தை தலைதூக்க விடமாட்டோம் என அக்கட்சியினர் சூளுரை ஏற்றுக்கொண்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். நினைவுதினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற கட்சியினர் மேற்கண்ட இந்த சூளுரையை ஏற்றுள்ளனர்.
அதாவது சசிகலா குடும்பத்தை சார்ந்த யாருக்கும் மீண்டும் அதிமுகவில் இடமில்லை என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில் இந்த உறுதிமொழி அமைந்துள்ளது.

ஓ.பி.எஸ்
எம்.ஜி.ஆர். நினைவுதினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ். உறுதிமொழியை வாசிக்க அதனை மற்றவர்கள் வழிமொழிந்து கூறினர்.

விடமாட்டோம்
அதிமுகவில் எந்தவொரு தனி குடும்பத்தின் ஆதிக்கத்தையும் தலைதூக்க விடமாட்டோம் என ஓ.பி.எஸ். உறுதிமொழி வாசித்தது தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். மீண்டும் சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்பதை தெளிவாக குறிப்பிடும் வகையில் இது இருக்கிறது.

தலைவன்
மேலும், ஒரு கட்சிக்கு நல்ல தொண்டர்களும் வேண்டும், நல்ல தலைமையும் வேண்டும் என்றும், இவை இரண்டுமே அமைந்திருப்பது அதிமுகவுக்கு மட்டுமே எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அந்த உணர்வோடு ஒற்றுமையோடு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

வேண்டுகோள்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் விட்டுச்சென்ற கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என ஓ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் சாதித்து வெற்றிக்கனியை பறிப்போம் என்ற உறுதிமொழியையும் அவர் கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications