ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார்! அமித் ஷாவிடம் அந்த 2 ரகசிய வாக்குறுதி? பாஜகவுக்கு பம்பர் ஆஃபர்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநில அரசியலில் இதுவரை நிலவி வந்த மௌனமும் யூகங்களும் உடைக்கப்பட்டு ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது... ஆம், இத்தனைநாளும் சஸ்பென்ஸ் வைத்து வந்துள்ள ஓபிஎஸ், இனி யாருடன் சேரப்போகிறார்? அந்த அணியில் ஓபிஎஸ்ஸுக்கான ரோல் என்ன என்பது குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன..
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்" என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்பது நீடித்தபடியே உள்ளது..

ஓபிஎஸ் முடிவு என்ன
பொங்கல் பண்டிகைக்கு கூட்டணியை சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொல்லவில்லை.. உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்றார்.. பிறகு கோயில் கோயிலாக சுற்றி வந்தபடியே உள்ளார்..
மற்றொருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தையையும் நடத்தியபடியே வருகிறார்.. தவெக, திமுக, என்டிஏ, இப்படி 3 சாய்ஸ்களும் ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதில் யாருடன் செல்வார் என்பது பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது..
அதிமுக-பாஜக கூட்டணி
இந்நிலையில், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணிக்குள் நுழைந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இதுவரை முரண்பட்டே வந்தார். ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவிலோ அல்லது கூட்டணியிலோ சேர்க்க இடமே இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து வந்த நிலையில், இப்போது டெல்லியின் தலையீட்டால் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது..
அமித் ஷாவுடன் சந்திப்பு?
தனது ஆதரவாளர்கள் மாற்று கட்சிகளுக்குத் தாவ தொடங்கிய சூழலில், ஓபிஎஸ் தனது அடுத்தகட்ட நகர்வாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் டெல்லி செல்லவிருக்கும் ஓபிஎஸ், அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்ய போகிறாராம்..
இந்த கூட்டணியில் இடங்களை பகிர்ந்துகொள்வதில் சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது... அதாவது ஓபிஎஸ் தரப்பில் 6 தொகுதிகள் கேட்டுள்ளாராம்..
ஆனால் தான் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்றும், மாநிலம் தழுவிய பிரசாரத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளாராம்,.. ஆனாலும் தனது மகன் ரவீந்திரநாத்திற்கு பெரியகுளம் தொகுதியை மட்டும் கண்டிப்பாக தர வேண்டும் என்று கேட்டுள்ளாராம்..
பிப்ரவரி 1ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அவருடன் ஓபிஎஸ் ஒரே மேடையில் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..
சாதக, பாதகங்கள்
இது உண்மையா? வதந்தியா என்று தெரியவில்லை.. ஒருவேளை, ஓபிஎஸ் மீண்டும் கூட்டணியில் இணைந்தால், அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் தடுக்கப்படுவது மிகப்பெரிய சாதகமாகும்.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைக்கவும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரு வலுவான மாற்று சக்தியாகத் தோற்றமளிக்கவும் இது உதவும். டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை ஒரே அணியில் வைப்பதன் மூலம் எதிர்க்கட்சி வாக்குகளை முழுமையாகத் திரட்ட முடியும்.
அதே சமயம், "ஓபிஎஸ்ஸைச் சேர்க்க மாட்டேன்" என்று பிடிவாதமாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது டெல்லி அழுத்தத்திற்காக பணிந்தது அவரது தலைமைப் பண்பிற்கு ஒரு பாதகமாகவே பார்க்கப்படும். மேலும், ஓபிஎஸ் அணிக்கு தொகுதிகளை ஒதுக்கும்போது அந்தந்த பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைய வாய்ப்புள்ளது. இது தேர்தல் நேரத்தில் கூட்டணிக்குள் உள்ளடி வேலைகளையும், திமுகவின் விமர்சனங்களையும் வலுப்படுத்தக்கூடும்.
மொத்தத்தில் சிதறிக் கிடக்கும் அதிமுகவின் பிரிவுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர பாஜக முயற்சிப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த அதிரடி அரசியல் மாற்றங்கள் வரும் தேர்தலில் ஆளும் தரப்பிற்கு எந்த அளவுக்கு சவாலாக அமையும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications