ஆல் ஓகே! வண்டிய மன்னார்குடி விடு - ஓபிஎஸ் ருத்ரதாண்டவம்.. சசிகலா ஆனந்த தாண்டவம்! டென்சனில் எடப்பாடி
சென்னை: அதிமுகவில் மோதல் விவகாரத்தில் தனக்கு சாதகமான சூழல் நிலவி வரும் நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. இதனை தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது.

உத்தரவு
ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23 க்கு முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போனது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்கின்றனர்.

அணி தாவல்
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த வழக்கு இருவர் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. நடப்பதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இருப்பதால் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அணி தாவ தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ.
இந்த நிலையில் உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஐயப்பன், சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஏற்கனவே அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் தற்போது எம்.எல்.ஏக்கள் பலம் 4 ஆக அதிகரித்துள்ளது.

ஓ.பி.எஸ். பேட்டி
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "எங்களுடைய எண்ணம் செயல் அனைத்துமே ஒன்றுபட்ட அதிமுக. ஜூன் 23 ஆம் தேதி ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு என்ற பெயரில் நாடகம் நடத்தி இருக்கின்றனர். தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் ஆதரவு எங்களுக்கு முழுமையாக இருக்கிறது. மாவட்டம்தோறும் இணைப்பை வலியுறுத்தி புரட்சிப் பயணத்தை தொடங்குவோம்.

விரைவில் சந்திப்பு
உறுதியாக மேலும் சில எம்.எல்.ஏக்கள் வருவார்கள். தேவைப்பட்டால் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்தித்து பேசுவேன்." என்றார். இந்த நிலையில் தனக்கு சாதகமான சூழல் கட்சியில் நிலவி வருவதால் விரைவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தேனி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. ஒபிஎஸ் தங்களுடன் இணைந்து செயல்படுவது சசிகலா தரப்புக்கும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.

எடப்பாடி அதிர்ச்சி
இருவரும் ஒன்றாக இணைந்தாலும் மேலும் சில எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் அணி தாவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் அணி தாவிய அதிர்ச்சியில் இருந்து மீளாத எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு தொடர்பான அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications