ஓபிஎஸ் முன் இருக்கும் 2 வாய்ப்புகள்.. பாஜக கொடுக்கும் ஐடியா.. விஜய்யுடன் நடக்கும் சந்திப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ் முன்பாக 2 வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக பார்க்கப்படுகிறது. அந்த 2 வாய்ப்புகள் என்ன என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்திருப்பது, ஓபிஎஸ் அணியை தனி மரமாக்கி இருக்கிறது. ஏனென்றால் விஜய்யுடன் கூட்டணியில் இணைய அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் திடீரென டிடிவி தினகரன் அதிமுக கூட்டணி பக்கம் தாவினார். இதனால் ஓபிஎஸ் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

OPS

இதனிடையே டிடிவி தினகரன் தரப்பில் இருந்து ஓபிஎஸ்க்கு கூட்டணிக்கு வர வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அதேபோல் ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக அன்புமணியும் கூறி இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் தரப்பில் என்டிஏ கூட்டணிக்கு வருமாறு டிடிவி தினகரன் உட்பட யாரிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். ஓபிஎஸ்ஸால் ராஜ்ய சபா எம்பியான தர்மரும் கூட எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றுவிட்டார். இதனால் ஓபிஎஸ் உடன் இப்போது முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மட்டுமே இருக்கிறார்.

அவருடனும் திமுக பேசி வருவதாக சொல்லப்படுகிறது. ஓபிஎஸ் முடிவு எடுக்க தாமதம் செய்வதால், அவரின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணிக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. பாஜக தரப்பில் ஓபிஎஸ் உடன் பேசப்பட்டு வருகிறது. அதில் ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்கவில்லை.

இதனால் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் கைகோர்த்தால், 2 அல்லது 3 சீட்கள் வரை கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அமமுகவின் குக்குர் சின்னத்தில் ஓபிஎஸ்ஸை போட்டியிட வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் எந்த ஒப்புதலும் கொடுக்கவில்லை. ஓபிஎஸ் முன் இருக்கும் இன்னொரு வாய்ப்பாக தவெக கூட்டணி உள்ளது.

ஏற்கனவே அதிமுக சார்பாக 3 முறை முதல்வர் பதவியை ஏற்றுள்ளதால், ஓபிஎஸ் திமுகவில் இணைவது கடினமானது என்று பார்க்கப்படுகிறது. இதனால் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ஓபிஎஸ் தேர்தலை சந்திக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த 2 முடிவில் ஓபிஎஸ் எந்த முடிவை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+