ஓபிஎஸ் போட்ட கண்டிஷன்.. எல்லாத்துக்கும் காரணமான "அந்த" கையெழுத்து! விடுவேனா.. எடப்பாடி பிடித்த பிடி
சென்னை: அதிமுகவில் முக்கியமான ஒரு கையெழுத்து விவகாரம் காரணமாக டாப் தலைகளுக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. நடந்து முடிந்த முதல்கட்ட உட்கட்சி தேர்தலுக்கு பின்புதான் இந்த மோதல் தீவிரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக பல்வேறு தகவல்கள், அரசியல் கிசுகிசுக்கள் வெளியாக தொடங்கி உள்ளன. முக்கியமாக சமீபத்தில் சென்னையில் நடந்த அதிமுக கூட்டத்தில் டாப் தலைகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்ததாக கூறப்பட்டது.
அதிலும் இந்த கூட்டத்தில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கோபத்துடன் பாதியில் வெளியேறியதாகவும் கூறப்பட்டது.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் தேர்வான 25 மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளை ஓபிஎஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இவர்களின் நியமனத்தில் கையெழுத்து போட தொடர்ந்து மறுத்து வருகிறாராம் ஓபிஎஸ். அதன்படி, 25 மாவட்டத்தில் தேர்வான பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் ஆதரவாளர்கள். அதனால் அவர்களின் நியமனத்தில் நான் கையெழுத்து போட முடியாது.

கையெழுத்து
அவர்களை நியமனம் செய்தால்.. மற்ற மாவட்ட தேர்தலில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பதவியில் அமர்வார்கள். அதன்பின் தனக்கான ஆதரவை வைத்து இபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆகிவிடுவார் என்று ஓபிஎஸ் அந்த நியமனத்தில் கையெழுத்து போட மறுத்து இருக்கிறார். அதோடு அதில் கையெழுத்து போட வேண்டும் என்றால் நான் ஒரு கண்டிஷன் போடுவேன்.. அதை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட செயலாளர்கள்
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட செயலாளர்களை மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி இருக்கிறாராம். அப்படி செய்தால் நான் இதில் கையெழுத்து போடுகிறேன் என்று கூறி உள்ளாராம். ஆனால் இதை எடப்பாடி தரப்பு ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. அது எப்படி தேர்தல் நடத்தி தேர்வான உறுப்பினர்களை ஓபிஎஸ் நியமனம் செய்யாமல் இருக்க முடியும். இது கட்சி விதிக்கு எதிரானது என்று கூறி உள்ளாராம்.

மாற்ற முடியாது
அதேபோல் மாவட்ட செயலாளர்களை ஏன் மாற்ற வேண்டும். நான் எனக்கு ஆதரவானவர்களை மாற்ற ரெடி என்றால் தென் மாவட்டத்தில் அவருக்கு ஆதரவாளர்களை அவர் மாற்ற தயாரா என்று எடப்பாடி கேம்பில் இருந்து பதில் கேள்வி வந்து இருக்கிறதாம். இதனால் இப்போது வரை உறுப்பினர்கள் நியமனத்தில் கையெழுத்து போடப்படாமல் உள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் பதற்றம் தெரிவிக்கின்றது. ஏற்கனவே சசிகலா விவகாரம் கட்சியில் பெரிதாகி உள்ள நிலையில் தற்போது இந்த கையெழுத்து விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications