ஓபிஎஸ் vs ஓபிஎஸ் vs ஓபிஎஸ் vs ஓபிஎஸ் vs ஓபிஎஸ்.. தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை.. தெரியுமா?
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஒன்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்றோடு வேட்புமனுத்தாக்கல் முடிகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இது போக மற்ற நான்கு ஓபிஎஸ்களும் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் உசிலம்பட்டியில் வசிப்பவர், மற்றொருவர் காட்டூரைச் சேர்ந்தவர், இருவர் மதுரையைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் சுயேச்சை என்பதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.
இதில் வேட்பாளர் நம்பர் 61ன் பெயர் பன்னீர்செல்வம். இவரின் அப்பா பெயர் ஒட்டகரத்தேவர். முன்னாள் முதல்வரின் ஓ பன்னீர்செல்வம் தந்தையின் பெயரும் ஒட்டகரத்தேவர். தமிழில் பன்னீர்செல்வம் என்ற பெயர் பொதுவானது, ஒட்டகரத்தேவர் என்பது பொதுவானது அல்ல. ஆனாலும் அதே பெயர் கொண்டவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
'ஓ'வில் தொடங்கும் பெயர் அரிது. மற்ற பன்னீர்செல்வங்களின் அப்பாக்களின் முறையே ஒச்சப்பன், ஒய்யாரம் மற்றும் ஒய்யாத்தேவர் ஆகும். இவர்களுக்கு விரைவில் சுயேச்சை சின்னம் ஒதுக்கப்படலாம்.
5 பேர் தாக்கல்: இப்படி 5 பேர் ஒரே பெயரில் மனு தாக்கல் செய்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஒன்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நடந்துள்ளது. ஏற்கனவே இப்படி பல முறை நடந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் மூத்த அரசியல்வாதி கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் போட்டியிட்டார். அவர் எதிர்த்து 6 ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டனர். அதுதான் அதிக நபர்கள் ஒரே பெயரில் போட்டியிட்ட தொகுதி ஆகும்.
அதற்கு அடுத்து ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 5 ஓ பிஎஸ் போட்டியிடுவது இரண்டாவது பெரிய சாதனை ஆகும்.
இது போல நடப்பது தற்செயல் நிகழ்வு அல்ல, இது கவனமாக கட்டமைக்கப்பட்ட அரசியல் திட்டமிடல் மூலம் நடப்பது ஆகும். உதாரணமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த வி.சி.க தலைவர் தொல் திருமாவளவனின் தோல்விக்கு பெயர் குழப்பம் முக்கிய காரணம். அவரின் பெயரை கொண்ட டி.திருமாவளவன், சுயேட்சையாக 289 வாக்குகள் பெற்றார். இதுவும் கூட திருமா தோல்வி அடைய காரணம் ஆகும்.
அதே போன்ற சவால் தற்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டு உள்ளது.
ஓ பன்னீர்செல்வம் சுயேச்சை ஆனது எப்படி?:
ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. 6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சீட் கொடுக்க பாஜக ரெடியாகிவிட்டது. ஆனால் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் இல்லை.
அப்படி இருக்க தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். உங்கள் மகன் உள்ளிட்டோர் நிற்க வேண்டும் என்றால்.. தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். பாஜகவின் தாமரை சின்னத்திலேயே நில்லுங்கள். அதுதான் முக்கியம். அப்போதுதான் நீங்களும் வெல்ல முடியும்.. தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று பாஜகவினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
கோரிக்கை: இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். அப்போது, நாம் இரட்டை இலைக்குத்தான் போராட வேண்டும். தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் நாம் பாஜக என்று ஆகிவிடும். அதிமுகவில் சேரவே முடியாது.
தனி சின்னத்தில் நிற்க வேண்டும். ஆனால் தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனி சின்னத்தில் 2 - 3 சீட்டாவது வேண்டும் என்று கேளுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து வேறுவழியின்றி சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரத்தில் போட்டியிட ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications