OPS: டிச.15-க்குள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்! எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கெடு+ வார்னிங்
சென்னை: டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடத்தி திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில், அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது.
அதிமுகவின் இந்த நிலையை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலை உள்ளது. வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட போகிறோம். எனவே டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள். எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என பேச்சு எழுந்த போது அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ், நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.
பொதுக் குழு கூடி
இதையடுத்து அதிமுக பொதுக் குழு கூடி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய முடிவு செய்தது. அந்த பொதுக் குழு கூடிய போது கட்சி அலுவலகத்தை ஆக்கிரமிக்க ஓபிஎஸ் சென்றிருந்தார். அங்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்
இதையடுத்து அதே பொதுக் கூட்டத்தில் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் எத்தனையோ சட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் ஒன்றும் ஆகவில்லை. இதையடுத்துதான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.
அதிமுகவில் உரிமைகள்
இந்த குழுவை அவர் தொடங்க காரணம், அதிமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு இருந்த உரிமைகள், பதவிகள், முடிவு எடுக்கும் அதிகாரம் ஆகியவற்றை மீட்டெடுப்பது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுக அணியை எதிர்த்து ஓபிஎஸ் இந்த அமைப்பை தொடங்கியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி
கடந்த 2024 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை ஓபிஎஸ் சந்தித்தார். அப்போது தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்தித்ததை அடுத்து அவர் சுயேச்சையாக போட்டியிட்டு லட்சக்கணக்கில் வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். அதிமுக வேட்பாளருக்கு கடும் போட்டியாளராக உருவெடுத்தார்.
நல்ல நட்புறவு
இதையடுத்து பாஜகவுடன் நல்ல நட்புறவில் இருந்த ஓபிஎஸ், தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு அது கிடைக்கவில்லை. இதற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை பல முறை ஓபிஎஸ் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை, மெசேஜையும் பார்க்கவில்லை என ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ் விலகல்
இதையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகினார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அந்த கூட்டணியில் இருந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வெளியேறினார்.
ஒருங்கிணைப்பு
மேலும் அதிமுக ஒருங்கிணைப்புக்கு குரல் கொடுத்த செங்கோட்டையன், தேவர் ஜெயந்தி விழாவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசகிலா நட்பு பாராட்டினார். இதனால் செங்கோட்டையன் அதிமுக கட்சியை விட்டே நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஒன்றிணைந்து அதிமுகவை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து மீட்க தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், தற்போது ஓபிஎஸ்ஸும் கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications