டெல்லி விசிட்.. காவித் துண்டு.. அதிமுகவிலிருந்தே ஓ பன்னீர் செல்வம் நீக்கமா?.. மாஜி எம்பி சந்தேகம்
சென்னை: இன்று நடைபெறவுள்ள அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவி பறிப்பா இல்லை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கமா என முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரட்டை தலைமைகளில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக பதவியேற்க வேண்டும் என 95 சதவீத நிர்வாகிகள் விரும்புவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் வழக்கம் போல் இந்த பதவியையும் விட்டுக் கொடுக்க ஓபிஎஸ் விரும்பவில்லை. இதனால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவே தர்மயுத்தம் 2.0 வை நடத்தி வருகிறார். அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார். அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. அவரது வேன் டயர் பஞ்சராக்கப்பட்டது.

பொதுக் குழு கூட்டம்
இந்த நிலையில் ஓபிஎஸ் கடந்த 23 ஆம் தேதி பொதுக் குழுகூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிய பின்னர் அவர் நேராக டெல்லி சென்றார். அங்கு பிரதமரை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து பிரதமர் ஜெர்மனி சென்றதால் ஓபிஎஸ் சென்னை திரும்பினார். இதையடுத்து நேற்றை தினம் ஓபிஎஸ் மதுரை சென்றார்.

விமான நிலையத்தில்
அங்கு விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர் தன்னை சுற்றி சதி வலை பின்னப்பட்டது. அது யார் என தனக்கு தெரியும். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவோருக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவர் என்றார். இதையடுத்து அவருக்கு தேனியில் பாஜக நிர்வாகிகள் காவிதுண்டை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவில் சலசலப்பு
இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டது. இதற்கேற்ப முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் நேற்றைய தினம் பேசும் போது அதிமுக தொண்டர்களை மூளைச் சலவை செய்து தேசிய கட்சியில் இணைத்து விடலாம் என கனவு காண வேண்டாம் என ஓபிஎஸ்ஸை மனதில் நினைத்தே சொன்னதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூடுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஓபிஎஸ்ஸும் பதில் அறிக்கைவிடுத்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் தலைமைக் கழக குழு கூட்ட முடியாது என்றார்.

ஓபிஎஸ் நீக்கமா
இன்றைய தினம் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஏதேனும் ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் எம்பியான கே சி பழனிசாமி கூறுகையில் நடைபெறும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் ன் பொருளாளர் பதவி பறிப்பா அல்லது கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கமா? இதேபாணியில் தான் சசிகலா அவர்களின் பதவியும் பறிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் நிறுவனர்கள் என்ற பெயரில் ஓபிஎஸ், இபிஎஸ் பெயர்கள் அச்சிடப்பட்ட நிலையில் நேற்று முதல் நிறுவனர் - எடப்பாடி பழனிசாமி என அச்சிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுவிட்டது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications