Optical illusion: நீங்க அதிபுத்திசாலியா.. படத்தில் எந்த டேங்க் முதலில் காலியாகும்? 8 செகண்டுக்குள் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் (Optical illusion) புகைப்படத்தில் X, Y என இரண்டு டேங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு டேங்கில் அடிப்பகுதி பெரியதாகவும், இன்னொரு டேங்கில் அடிப்பகுதி குறுகியதாகவும் உள்ளது. இந்த இரண்டு டேங்குகளிலும் முழுவதும் தண்ணீர் உள்ள நிலையில், அந்த தண்ணீர் திறந்து விடப்பட்டால் எந்த டேங்க் முதலில் காலியாகும்? என்பதை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.. அதுவும் 8 செகண்டுக்குள் விடையை சொல்லுங்கள் பார்க்கலாம்.
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும். நம்மை யோசிக்க வைத்து விடையை சொல்வது போல் இருக்கும். பார்ப்பதற்கு ஈசி என தெரிந்தாலும் விடையை சொல்லும் போது தான் அதில் உள்ள கடினம் தெரியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
படத்திற்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, அது நம் பார்வைத் திறன் மற்றும் அறிவுத் திறனுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும். இதன் காரணமாகவே நெட்டிசன்கள் மத்தியில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு இந்தமாதிரியான இல்யூஷன் படங்கள் நல்ல பயனுள்ள பொழுது போக்காகவும் இருந்து வருகிறது.
சிலவகை ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து ஒருவரது கேரக்டரைக் கூட ஓரளவு கணித்து விட முடியும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போலவே புதிர் படங்களும் மூளையை கசக்கி பிழியவைப்பவையாக உள்ளன. சின்ன டிரிக்ஸ்கள் தான் இதற்கான விடையை கண்டுபிடிக்கும் சாவியாக இருக்கும்.
X, Y என இரண்டு டேங்குகள்
இது எப்படி நமக்கு தெரியமால் போனது என்று நம்மை யோசிக்க வைக்கும் வகையில் புதிர்கள் அமைந்து இருக்கும். இதனால், இதற்கான விடையை கண்டுபிடிப்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கும். அதுவா, இதுவா என்ற குழப்பத்தை மீறி விடையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் படத்தை கவனித்தால் விடையை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
அப்படித்தான் இன்று ஒரு ஆப்டிகல் புதிர் படம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்தால் புரியும்.. X, Y என இரண்டு டேங்குகள் உள்ளன. இரண்டு டேங்குகளிலும் 1,000 லிட்டர் தண்ணீர் உள்ளது. X என்ற டேங்கில் அடிப்பகுதி குறுகலாகவும், மேல் பகுதி அகலமாகவும் உள்ளது. இதே Y டேங்கை எடுத்துக்கொண்டால் அப்படியே நேர்மாறாக அடிப்பகுதி அகலமாகவும், மேல்பகுதி குறுகலாகவும் இருக்கிறது.
எந்த டேங்க் முதலில் காலியாகும்?
ஆனால் இரண்டு டேங்குகளுக்கும் அடிப்பகுதியில் தான் குழாய் இருக்கிறது. இப்போது கேள்வி என்ன என்றால் ஒரே நேரத்தில் குழாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும் பட்சத்தில், எந்த டேங்க் முதலில் காலியாகும் என்பது தான்.. அதாவது X என்ற டேங்க் முதலில் காலியாகுமா? அல்லது Y என்ற டேங்க் முதலில் காலியாகுமா? விடையை கண்டுபிடிக்க 8 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. சரியான விடை என்ன?
உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1.. 2.. 3.. ..8. ஓக்கே டைம் ஓவர்.. உங்களில் பலரும் சரியான விடையை கண்டுபிடித்து இருக்க கூடும். உங்களுக்கு பாராட்டுக்கள்.. ஆனால் ஒரு சிலர் இதற்கு என்ன விடையாக இருக்கும் என குழம்பி போய் இருப்பார்கள். சின்ன அறிவியல் பார்முலா தான்.. ஈசியாக கண்டுபிடித்து விடலாம்.. அதற்காக Y என்று சொன்னால் விடை தவறு ஆகும்.
சரியான விடை என்ன?
சரியான விடை X தான்.. அதாவது X என்ற டேங்கே முதலில் காலியாகும். உயரம் மற்றும் அழுத்தம் அதிகம் உள்ள இருந்தால் தண்ணீர் வேகமாக வெளியேறும். இந்த இரண்டும் X என்ற டேங்கில் தான் இருக்கும். மேல்பகுதியில் அதிக தண்ணீர் இருக்கும் போது கீழே வேகமாக உந்தி தள்ளும்.. இதனால் தண்ணீர் போர்ஸாக வெளியேறும். ஆனால் Y என்ற டேங்கில் அடிப்பகுதியில் அதிக அழுத்தம் இருந்தாலும் போக போக தண்ணீர் வெளியேறுவது குறைந்துவிடும். இதனால் X என்ற டேங்கே முதலில் காலியாகும். சரியான விடையை சொன்னவர்களுக்கு பாராட்டுக்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications