3 நிமிஷம்தான் டைம்.. முடிந்தால் இந்த புதிருக்கு விடையை கண்டுபிடிங்க பார்க்கலாம்.. சவாலுக்கு ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் புதிர் கணக்கில் 22 + 20 கூட்டினால் 42 என வருவதற்கு பதிலாக 84 என வருகிறது. இந்த விடை எப்படி வருகிறது என குழப்பமாக இருக்கிறதா? இதில் ஒரு சிறிய டெக்னிக் பின்பற்றப்பட்டு இருக்கிறது.. புதிருக்கான விடை என்ன? என்பதை 3 நிமிடத்தில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..

ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் புதிர் படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. நம் கண்களை குழப்பி, மூளைக்கு வேலை வைக்க கூடிய இத்தகைய புதிர் கணக்குகள், சிறு வயதில் படித்தவை நினைவு இருக்கிறதா? இல்லை சுத்தமாக கூட்டல் கழித்தலே மறந்துவிட்டதா? என சோதித்து பார்க்கும் விதமாக இருப்பதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் இதனை பகிர்ந்து விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

optical illusion offbeat trend


ஆப்டிகல் புதிர் கணக்குகள்

போட்டித் தேர்வுகளிலும் ஐகியூ திறனை சோதிக்கும் விதமாக புதிர் கணக்குகள் கேட்கப்படுவதால், போட்டி தேர்வர்களும் ஆர்வத்துடன் புதிர் கணக்குகளுக்கு விடையளிக்க முடிகிறதா என முயற்சித்து பார்ப்பதை பார்க்க முடிகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இங்கே ஒரு கணித புதிர் கொடுக்கப்பட்டுள்ளது.

21 + 10 = 31
22 + 20 = 84
23 + 30 = 159
24 + 50 = ?

இதில் இரண்டு எண்களை கூட்டி விடையும் கொடுக்கப்பட்டுள்ளது. சரி விடைதான் கொடுத்து விட்டீர்களே நாங்க எதை கண்டுபிடிக்க வேண்டும் என நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது. விடையெல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறதுதான்.. ஆனால் அங்கேதான் ட்விஸ்டே இருக்கிறது. வழக்கமான கூட்டலில் வந்த விடை இல்லை.. அப்படி இருந்தால் 22 + 20 = 42 என்றுதானே வந்து இருக்க வேண்டும்.

3 நிமிஷத்தில் கண்டுபிடிங்க

இந்த புதிரில் 84 என வந்து இருக்கிறது. இதற்கு என்ன டெக்னிக் பின்பற்றப்படுள்ளது என்பதை கண்டறிந்து சொல்ல வேண்டும். அதே டெக்னிக்கை பின்பற்றி 24 + 50 =? விடை என்ன கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான டாஸ்க்.. 3 நிமிடம் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.. பேப்பெரும் பேனாவையும் எடுத்து வைத்து விட்டீர்களா? உங்களுக்கான டைம் ஸ்டார்ட்..

கணக்கை நன்றாக பாருங்கள்.. சிறிய டிரிக்ஸ்தான் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அது தெரிந்தால் 3 நிமிடம் தேவையில்லை, ஒரு நிமிடத்தில் கூட பட்டையை கிளப்பிவிடலாம். போட்டி தேர்வுகளுக்கு ரெடியாகி வருபவர்களுக்கு இதெல்லாம் ரொம்பவே ஈசிதான் என நினைக்க வேண்டாம்.. ஏனெனில் வெறும் 1 சதவீதம் பேரே இதற்கான விடையை குறிப்பிட்ட 3 நிமிடத்தில் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.

சரியான விடை என்ன?

நீங்கள் கண்டுபிடித்த விடை 296 என்றால் சரியாக கணக்கிட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு பாராட்டுகள்.. விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறுபவர்களுக்கு நாங்களே விடையை தந்து விடுகிறோம்.

21 + 10 = 31 * 1 = 31
22 + 20 = 42 * 2 = 84
23 + 30 = 53 * 3 = 159

அதாவது இரண்டு எண்களையும் கூட்டி வந்த விடையுடன் 1, 2, 3 என்ற எண்களால் வரிசையாக பெருக்கப்பட்டுள்ளது. இதே அடிப்படையில் பார்த்தால், 24 + 50 = 74 என்ற எண்ணை 4 ஆல் பெருக்கினால் 296 விடை வரும்.. இதுவே சரியான விடையாகும். சில போட்டி தேர்வுகளில் கூட இதே மாதிரியான கேள்வியை கேட்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள். விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் பண்ணுங்கள். எத்தனை பேர் குறிப்பிட்ட 3 நிமிடத்திற்குள் கண்டுபிடித்துள்ளீர்கள் என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+