அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இது தெரியும்! இந்த படத்தில் ஒளிந்துள்ள உயிரினத்தை கண்டுபிடிங்க.. சவால்!
சென்னை: இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒளிந்து இருக்கும் உயிரினத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்றாலே பொதுவாக மக்களை போட்டு குழப்பி எடுக்கும். அது என்ன ஆப்டிக்கல் இல்யூஷன் என்று கேட்கிறீர்களா?
ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் மாயையான படங்கள் என்று சொல்லலாம். உதாரணமாக ஒரு போட்டோவில் நீங்கள் ஒரு உருவத்தை பார்க்கிறீர்கள்.. அதில் வேறு ஒரு உருவமும் மறைந்து இருக்கிறது என்றால் அது ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்பார்கள்!
இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்து உங்களின் குணாதிசயங்களை சொல்லிவிட முடியும். ஏன் உங்களுக்கு எவ்வளவு ஐக்யூ உள்ளது என்றும் கூட சொல்லிவிட முடியும்.

என்ன இமேஜ்
அந்த வகையில் இந்த செய்தியில் ஆப்டிக்கல் இல்யூஷன் படம் இடம்பெற்றுள்ளது. உங்களுக்கு இந்த படத்தை பார்த்ததும் உங்களுக்கு அதில் ஒரு டால்பின் உருவம் தெரியலாம். சரி இதுதான் ஆட்டம். இந்த படத்தில் உங்களுக்கு எத்தனை உயிரினங்களின் படங்கள் தெரிகின்றன. பலரும் பார்த்ததும் டால்பின் என்று சொல்லிவிடுவார்கள். இயல்பாக தெரிய கூடிய படம்தான் இது.

சுவாரசியம்
சரி கொஞ்சம் நேரம் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் உற்று பார்த்தால் இன்னொரு உயிரினம் உங்களுக்கு தெரியும். ஆம் டால்பின் வாயில் பார்த்தால் அந்த உயிரினம் தெரியும். டால்பின் வாயில் ஒரு மீன் உள்ளது. அந்த மீனை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது இரண்டாவது உயிரினம். இதையும் பலர் கண்டுபிடித்து இருப்பார்கள். சரி இப்போது ஆட்டத்தை சுவாரசியம் ஆக்குவோம்.

மூன்றாவது உயிரினம்
இந்த படத்தில் ஒரு மூன்றாவது உயிரினம் உள்ளது. முடிந்தால் அதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.இந்த படத்தில் ஒளிந்து இருக்கும் அந்த மூன்றாவது உயிரினத்தை அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கு 30 நொடிகள் டைம் படத்தை நன்றாக பாருங்கள். எந்த கோணத்தில் வேண்டுமானாலும் பாருங்கள். கண்டுபிடிக்க முடிகிறதா?

தெரிகிறதா?
நன்றாக உற்றுப்பார்த்தால் சமயங்களில் உங்களுக்கு தெரியாமல் போகலாம். சரி அவுட் ஆப் பாக்சில் யோசித்து பாருங்கள். அதே படத்தை தலைகீழாக வைத்து பாருங்கள். ம்ம் இப்போது தெரிகிறதா? தலைகீழாக வைத்து பார்க்கும் போது பறவைகள் பறக்கும் படம் உங்களுக்கு தெரியும். வானத்தில் பறவைகள் பறப்பது போல தெரியும். உங்களுக்கு அந்த பறவைகள் தெரிகிறது என்றால் வாழ்த்துக்கள்!












Click it and Unblock the Notifications