உங்களுக்கு ஒரு சேலஞ்ச்.. மறைந்து இருக்கும் பாம்பு.. 11 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு மறைந்து இருக்கிறது. அதை 11 செக்கண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.. இதுவரை வெறும் 2 சதவிகிதம் பேர் மட்டுமே இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் டிரெண்டிங்கில் உள்ளன. நமது மூளைக்கு வேலை வைக்கும் இதுபோன்ற ஒளியியல் மாயை படங்களில் உள்ள புதிர்களை நெட்டிசன்கள் கண்டுபிடிப்பதோடு, தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து சவால் விடுக்கின்றனர். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை மேலோட்டமாக பார்த்தால் விடை கிடைக்காது.
படத்தை நன்கு உற்று கவனித்தால் மட்டுமே அதில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்கலாம். எனவே, இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிப்புத்திறனை அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பாம்பு இருக்கிறது அதை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கான சவால்.. அதுவும் வெறும் 11 செக்கண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
சவாலுக்கு ரெடியா?: இந்த படத்தில் செடி கொடிகள் என பச்சை பசேல் என உள்ளது. எனவே இங்கு மறைந்து இருக்கும் பாம்பும் கண்டிப்பாக பச்சை நிறத்தில் தான் இருக்கும் என நீங்கள் யூகித்து இருப்பது தெரிகிறது. சவால் ஆரம்பிக்கும் முன்பே ஒரு டிப்ஸ்சையும் கொடுத்து விட்டோம்.. பிறகென்ன ஈசியாக கண்டுபிடிச்சிடலாம்.... உங்களுக்கான நேரம் தொடங்கியது...
1,2,3,...... 11 ஓகே டைம் ஓவர்... பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறேம். உண்மையாவே நீங்க ஜீனியஸ்தான்... சரி கண்டுபிடிக்காதங்களும் கவலை வேண்டாம்.. நாங்கள் மேலும் சில டிப்ஸ் தர்றோம். அதை வைத்து ஈசியா கண்டுபிடிச்சிக்கலாம்.. படத்தின் இடது புறத்தில் பாம்பு இல்லை.. எனவே அந்தப்பக்கமாக தேடிக்கொண்டு நேரத்தை வேஸ்ட் பண்ன வேண்டாம்..
வலது பக்கம் பார்க்கலாம்: நேரடியாக வலது பக்கமாக தேட ஆரம்பிங்க.. இப்போ கண்டுபிடிசிருப்பீங்க என நினைக்கிறோம். இப்பவும் கண்டுபிடிக்கலன்னா கூட பரவாயில்லை இன்னும் ஒரு ஈசியான டிப்ஸ்... வளைந்து நெளிந்து காட்சி தரும் பச்சை நிற கொடிகள் போலவே பாம்பும் மறைந்து இருக்கிறது. எனவே உன்னிப்பாக கொஞ்சம் பாருங்க... இப்போ கண்டுபிடிச்சீட்டிங்க தானே...

இன்னமும் கண்டுபிடிக்காதவங்களுக்கு விடையை நாங்களே சொல்லிவிடுகிறோம். மேலே உள்ள படத்தில் பாம்பு இருக்கும் பகுதி வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.. அடடா இதை மிஸ் பண்ணிட்டோமே என நினைக்கிறிங்கள... விடுங்க இதெல்லாம் சகஜம்தான்.. அடுத்த டாஸ்கில் அசத்திடுவோம்..












Click it and Unblock the Notifications