உங்க கண்களுக்கு சவால்.. படத்தில் ”மீன்” எங்கே இருக்கு? 10 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க!
சென்னை: இன்று சற்று சவால் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) புகைப்படத்தை பார்க்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பூனை ஒன்று எதையோ தீவிரமாக தேடிக்கொண்டு இருப்பது போல் தெரியும். உண்மை தான்.. இந்த படத்தில் மீன் ஒன்று மறைந்து இருக்கிறது. இந்த மீன் எங்கே என கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 10 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பொறுத்தவரை மூளையை கசக்கிப் பிழிய வைக்கக்கூடியது. இந்த படத்தைப் பொறுத்தவரை, கேள்விக்கான விடை வெளிப்படையாகக் கொடுக்கப்பட்டிருக்காது. பல கோணங்களில் உற்று பார்த்தால்தான் விடையை கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
அதிலும் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற சேலஞ்ச் இருப்பதால், அந்த நேரத்திற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் இந்த இல்யூஷன், புதிர் படங்கள் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பதை வைத்து கூட ஒருவரின் புத்திக்கூர்மை, சிந்தனை திறன் ஆகியவற்றை மதிப்பிட முடியும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
சில போட்டித் தேர்வுகளிலும் கூட தேர்வர்களின் திறனை அறியும் ஒரு பகுதியாக இதுபோன்ற இல்யூஷன், புதிர் படங்கள் இடம் பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். பொதுவாக இந்த இல்யூஷன் படங்களை கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடிப்பது போல இருக்கும். மேலோட்டமாக பார்த்தால் விடையை கண்டுபிடிக்க முடியாது. இதனால், அவசரக் கோலத்தில் படத்தை பார்த்து விடையை கண்டுபிடிக்க முயற்சித்தால் விடையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானது.
மீனை தேடும் பூனை
ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தால் விடை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சரி, இங்கே விஷயத்திற்கு வருவோம்... இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பூனை எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டு இருப்பது போலத் தெரிகிறது அல்லவா? கடும் பசியில் இருக்கும் இந்த பூனை, இந்த அறையில் பதுங்கியிருக்கும் மீன் ஒன்றைத் தேடிக்கொண்டு இருக்கிறது.
பூனைக்கு பயந்து ஒளிந்து கொண்டு இருக்கும் அந்த மீன் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. அதுவும் 10 விநாடியில்! இதுதான் உங்களுக்கான டாஸ்க்... என்ன, சேலஞ்சுக்கு ரெடியா? உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1, 2, 3,... 10. ஓகே, டைம் ஓவர்! பலரும் விடையை சரியாகக் கண்டுபிடித்திருப்பீர்கள்.
மீன் எங்கே இருக்கிறது?
சரியாகக் கண்டுபிடித்தவர்கள் எத்தனை நொடியில் விடையை கண்டுபிடித்தீர்கள் என்பதை கமெண்ட் பண்ணுங்கள்... பூனை கூட கண்டுபிடித்திருக்கும் போல, "என்னால கண்டுபிடிக்க முடியலையே!" என்று படத்தையே உற்று பார்த்துக்கொண்டு இருப்பவர் நீங்கள் என்றால் கூடுதலாக 10 விநாடி எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு டிப்ஸும் தருகிறோம் விடையை கண்டுபிடிக்க..
மீன் பதுங்கியிருப்பது படத்தின் வலது பக்கத்தில்தான். எனவே பூனையின் இடது புறமாகத் தெரியக்கூடிய பக்கெட்டில் மீன் இருக்குமோ எனத் தேட வேண்டாம். அங்கு மீனைத் தேடினால் 10 நிமிடம் ஆனாலும் விடை தெரியாது. படத்திற்கான விடையை இப்போது பலரும் கண்டுபிடித்திருக்கலாம். இப்போதும் கூட விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
இது தான் விடை

இல்யூஷன் படங்களைப் பொறுத்தவரை, சில டிரிக்ஸ்களே இருக்கும். அடிக்கடி இந்த இமேஜ்களைப் பார்த்து விடையை கண்டுபிடித்தவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். எனவே, இந்த இல்யூஷன் படங்கள் என்பது ஜாலியான புதிர் விளையாட்டுத்தான். இதற்கு விடையை கண்டுபிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் எனவே அனைவருமே அதிபுத்திசாலிதான்!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications