படத்தில் 3 பேரழகிகள்! ஒளிந்தபடியே சைட் அடிக்கும் 3 ஆணழகன்கள்! 7 செகன்டில் கண்டுபிடிங்க பாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்டிக்கல் இல்யூஷன் விளையாட்டை விளையாடுவோமா மக்களே! இன்று கொடுக்கப்பட்ட படத்தில் 3 இளம் பெண்கள் உள்ளனர். அவர்களை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கும் 3 இளைஞர்கள் எங்கே என்பதை கண்டுபிடித்துவிடுங்கள் பார்ப்போம்.

அப்படி கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் பாஸ், கில்லாடி! என்ன இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? ஓய்வு நேரத்தை அரட்டை அடித்து வெட்டி கதை பேசி வீணாக்குவதைவிட்டுவிட்டு தினமும் இது போல் ஏதாவது மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாடினால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

Optical Illusion could you find the 3 young men hiding in the picture

அந்த நாளும் புத்துணர்ச்சியாக இருக்கும். புதிரை கண்டுபிடிக்கும் முன்பு ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?

திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?

அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.

நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. கடைசியில் விடை சொல்லும் போதுதான் அய்யோ இது கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதே என எண்ணுவோம். அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் ஒரு படத்தை காட்டுகிறோம்.

அதாவது ஒரு படத்தில் 3 அழகான பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கை கோர்த்தபடி நின்று கொண்டிருக்கிறார்கள். மூவரும் அத்தனை அழகு! தலையில் ஸ்கார்ஃப் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பின்புலத்தில் ஒரு வீடு இருக்கிறது. அந்த பெண்களும் வண்ண உடைகளை அணிந்திருக்கிறார்கள்.

அவர்களை சுற்றியிருக்கும் வண்ணங்களும் கண்களை பறிப்பது போல் இருக்கிறது. இதில் என்னத்த கண்டுபிடிக்கிறது என கேட்கிறீர்களா? வெயிட்! அழகு என்றாலே ஆபத்துதானே! இந்த 3 அழகான பெண்களையும் 3 ஆண்கள் மறைந்திருந்தபடியே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை 7 செகண்ட்டுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? நிஜமாதான்! இந்த படத்தில் இருப்பது 6 பேர், அதில் நன்றாக தெரிவது 3 பேர்! தெரியாதது 3 பேர்! ஆக மொத்தம் 6 பேர் இருக்காங்க. இதுதான் உங்களுக்கான சவால், என்ன இந்த சவால நீங்கள் ஏற்கிறீர்களா. படத்தை நாள் பூரா உற்று உற்று பார்த்துனு இருக்கக் கூடாது.

7 வினாடிகள்தான் டைம்! அதுக்குள்ள கண்டுபிடிக்க வேண்டும். முயற்சி திருவினையாக்கும். என்ன அந்த 3 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லையா, நாங்களே சொல்லிவிடுகிறோம். மரங்களுக்கு மத்தியில் 3 பேர் இருந்து இந்த பேரழகிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ வட்டமிட்டு காட்டியுள்ளோம். என்ன ஜஸ்ட் மிஸ்ஸா!

Optical Illusion could you find the 3 young men hiding in the picture
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+