உங்க கண்களுக்கு சவால்.. படத்தில் “summer” என்ற வார்த்தை எங்கே இருக்கு.. 7 செகண்டில் கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் கண்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் "summer" என்ற வார்த்தை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 7 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான இன்றைய சவால் இதுவே ஆகும்.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் புதிர் படங்கள் மூளைக்கு மட்டும் அல்ல, நமது கண்களையே நம்மை ஏமாற்ற வைத்து விடும். மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் படத்தை ஆழ்ந்து பார்த்தால் வேறொரு விதமாகவும் சில நேரம் தெரியும். சிறுவயதில் மம்மி டாடி மிட்டாய் கவரை எப்படி மாற்றி மாற்றி பார்க்கும் போது வேறு விதமாக தெரியுமோ அதுபோல ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் கண்களை குழப்பி மூளையை சோதித்து பார்த்துவிடும்.

optical illusion offbeat trend

இந்த புதிர் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானது என்பதால் இணையத்தில் நெட்டிசன்கள் இடையே அதிகம் டிரெண்ட் ஆகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் படங்கள் நினைவாற்றலை அதிகரிப்பதாகவும் கூட ஆய்வு கூறுகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், சம்மர் என்ற ஆங்கில எழுத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 7 செகண்டில்.. அதுதான் உங்களுக்கான டாஸ்க்..

என்ன சவாலுக்கு ரெடியா.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை நன்றாக பாருங்கள். நீச்சல் குளத்தில் இரண்டு பெண்கள், இரண்டு இளைஞர்கள் என மொத்தம் 4 பேர் குளிப்பது போன்ற வரைபடம் உள்ளது. இந்த வரைபடத்தில் ஒரு இடத்தில்தான் Summer என்ற வார்த்தை உள்ளது. உங்களுக்கான டைம் தொடங்கியது. 1, 2, 3, 4... 7. உங்களுக்கான டைம் முடிந்தது. பலரும் விடையை குறிப்பிட்ட அந்த 7 செகண்டில் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.

குறிப்பிட்ட 7 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவர்களுக்கு கூடுதலாக 7 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது முயற்சித்து பாருங்கள்.. கூடுதல் டைமில் பலரும் கண்டுபிடித்து இருக்க கூடும். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிடலாம். படத்தில் இடது பக்கம் விடை இல்லை. எனவே அந்த பக்கம் விடையை தேடிக்கொண்டு இருந்தால் 7 செகண்ட் இல்லை.. 70 செகண்ட் ஆனால் கூட விடை கண்டுபிடிக்க முடியாது.

optical illusion offbeat trend

வலது பக்கம்தான் விடை உள்ளது. எனவே வலது பக்கத்தில் ஆழ்ந்து பாருங்கள். தற்போது பலரும் விடையை கண்டுபிடித்து இருக்க வாய்ப்பு உள்ளது. அட இன்னமும் விடை தெரியவில்லையே என நினைப்பவர்களுக்கு விடையை கீழே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளோம். படத்தில் சரியான விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் பதிவிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+