கில்லி படம் கான்செப்ட்டேதான்! இந்த பொம்மைக்கு நடுவே நாய் எங்க இருக்கு பாருங்க! 5 செகன்ட்ஸ்தான் டைம்!
சென்னை: பொம்மைகளுக்கு இடையே ஒரு நாய் இருக்கிறது. அதை 5 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் புத்திசாலி.
கண் கட்டி வித்தை எனப்படும் ஆப்டிக்கல் இல்யூஷனை வெறும் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டாக மட்டும் பார்க்க வேண்டாம். இது அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது. சுவாரஸ்யமாக இருப்பதால் நிறைய பேர் இதை விளையாடுகிறார்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் சுவாரஸ்யம் மட்டும் இல்லாமல் த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும்.

இது போன்ற விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் உங்கள் கவனத்தை திசை திருப்பாமல் வைத்திருக்கும். உங்கள் கற்பனை வளத்தை அதிகரிக்கும். எண்ணற்ற பிர்சசினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திறமையை வளர வைக்கும்.
மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடிப்பதுதானே ஆப்டிக்கல் இல்யூஷன் என சாதாரணமாக நினைக்காதீர்கள். இதன் மூலம் நிறைய புதிர்களை திறமையாக கையாளலாம். உங்கள் கழுகு பார்வைக்கு வேலை வந்துவிட்டது. இந்த கட்டுமான பணிகள் நடைபெறுவது போன்ற படத்தில் உங்கள் மூளையை செலுத்துங்கள்.
கில்லி படம் பார்த்திருக்கிறீர்களா! அதில் பிரகாஷ் ராஜால் ஆபத்து என்றவுடன் திரிஷாவை விஜய் தனது வீட்டிற்குள் மறைத்து வைத்திருப்பார். அப்போது அவருடைய தங்கை , விஜய் அறையில் யாரோ இருப்பதாகவும் அவர் யாரிடமோ பேசுவதாகவும் தங்கை புவனா தனது தாயிடம் சொல்வார். அப்போது அவரது தாய் விஜய் அறையை பார்ப்பார்.

அங்கு நிறைய பொம்மைகளுக்கு மத்தியில் திரிஷா அமர வைத்திருப்பார். விஜய்யின் தாயும் இந்த பொம்மை லட்சணமாக இருப்பதாக திரிஷா சொல்லிவட்டு பொட்டு வைத்தால் நன்றாக இருக்கும் என கூறி பொட்டு வைக்க முயல்வார். அம்மா தொட்டு விட்டால் அது பொம்மை அல்ல பொண்ணு என்ற உண்மை வெளிப்பட்டுவிடுமே என்ற அச்சத்தில் விஜய்யே பொட்டை வாங்கி வைத்துவிடுவார்.
அது போல் ஒரு அறையில் நிறைய பொம்மைகள் உள்ளன. அதில் ஒரு உண்மையான நாயை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்கள் புத்திசாலிதான். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா, நாய் எங்கே இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம். இன்னுமா கண்டுபிடிக்கிறீர்கள். அப்படியென்றால் நாங்கள் சொல்லிவிடுகிறோம். இந்த படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளதுதான் உண்மையான நாய்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications