91% பேர் ஃபெயிலாகிட்டாங்க! உங்களால் முடியுமா.. அதுவும் 6 வினாடியில் காரை கண்டுபிடியுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த படத்தில் கார் ஒன்று மறைந்திருக்கிறது. அதை 6 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடிகிறதா என பாருங்கள். 91 சதவீதம் பேர் முயற்சித்து கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் கண் கட்டி வித்தை இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளன. பார்வையை ஏமாற்றும் விளையாட்டு என்றும் சொல்லலாம், இல்லாவிட்டால் உங்கள் திறனை சோதனை செய்யும் என்று கூட சொல்லலாம்.

Optical Illusion Find the hidden car in the picture in 6 seconds

ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது விலங்குகள், பறவைகள், பொருட்களை கண்டுபிடித்து சொல்வதுதான். இதை ஒரு மேஜிக் என்று கூட சொல்லலாம். சாதாரணமாக பார்த்தால் தெரியாது, நன்கு மூளையை கசக்கி பிழிந்து பார்த்தால்தான் தெரியும்.

இது அனைவரையும் உற்சாகப்படுத்தும் விளையாட்டு. வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கி அமைதியாக இருக்கிறதா, கவலையேபடாதீங்கள். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை அனுப்பி வைத்தால் போதும். தூங்குவோரும் எழுந்து ஏதாவது ஒரு பதிலை கூறுவர், குரூப்பும் ஆக்டிவ்வாக இருக்கும். பதில் கண்டுபிடிப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

வெற்றி தோல்வி என்றில்லை, போட்டிகளில் பங்கேற்றாலே அவரும் வெற்றியாளர்தான். ஆப்டிக்கல் இல்யூஷனை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விட வேண்டும் என எண்ணக் கூடாது. ஏனென்றால் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் இருக்கும்.

ஆனால் விடையை மட்டும் சொல்லிவிட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அட இந்த இடத்தில் நாமும்தானே பார்த்தோம், ஆனால் கிடைக்கலையே என உச் கொட்டுவீர்கள். அப்படியொரு மாயாஜாலம் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் நடக்கும். அப்படி ஒரு படம் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.

இந்த படத்தில் ஒரு பூங்கா போல் இருக்கிறது. அங்கு குழந்தைகள் எல்லாம் ஸ்கேடிங், பேஸ்கட் பால் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒரு குச்சி ஐஸ் வண்டியும் இருக்கிறது. ஒரு மரத்தின் நிழலில் வயதானவர்கள் இளைபாறுகிறார்கள். ஒரு பெஞ்சில் ஸ்கேட்டிங் விளையாட இருவர் தயாராகிறார்கள். ஒரு சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறான். இந்த படத்தில் ஒரு காரை எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லையா!

அதும் 6 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டுமாம். என்ன கண்டுபிடித்து விட்டீர்களா? 1, 2, ,3, 4, 5, 6 டைம் ஓவர். குச்சி ஐஸ் பெட்டிக்கு அடியில் ஒரு மஞ்சள் நிறத்தில் பொம்மை கார் இருக்கிறதே அதுதான். கார் என்றோம், அது நிஜ காராகவும் இருக்கலாம், பொம்மை காராகவும் இருக்கலாம். என்ன மிஸ் செய்துவிட்டீர்களா?

Optical Illusion Find the hidden car in the picture in 6 seconds
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+