Optical illusion: படத்தில் எத்தனை சிங்கங்கள் உள்ளன? 7 செகண்ட் தான் டைம்! லட்சத்தில் ஒருவரால் தான் முடியும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் (Optical illusion) படத்தில் ஒரே ஒரு சிங்கம் மட்டும் நம் கண்களுக்கு பார்த்தவுடன் தெரியும் வகையில் இருக்கும். ஆனால் நன்கு உற்று பார்த்தீர்கள் என்றால் படத்தில் பல சிங்கங்கள் இருப்பது தெரியும். இன்றைய சவால் என்னவென்றால், படத்தில் மொத்தம் எத்தனை சிங்கங்கள் இருக்கின்றன? என்று கண்டுபிடிப்பது தான்.. அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.

கண்களை ஏமாற்றும் படங்களையே ஆப்டிகல் இல்யூசஷன் படங்கள் என்று சொல்வர். ஒருவர் ஒரு பெயிண்ட்டிங் வரைந்தால் அவர் எதையோ மனதில் நினைத்து வரைந்தாலும், மற்றவர் பார்வைக்கு அது வேறு மாதிரியாக தெரிந்தால் அது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.

optical-illusion-how-many-lions-can-you-spot-in-this-image-only-1-in-a-million-can-do-it

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், சாலையில் தூரத்தில் பார்க்கும் போது தண்ணீர் இருப்பது போல் தெரியும்.. ஆனால் அருகில் சென்று பார்த்தால் தான் தெரியும்.. அதில் தண்ணீர் இருக்காது.. கானல் நீர் என்று.. அதேபோல் தான் இருப்பதை இல்லாதது போலவும், இல்லாததை இருக்கின்றது போலவும் நம் கண்களை ஏமாற்றக் கூடிய, ஏமாற்றும் வகையில் வரையப்பட்டிருக்கும் புகைப்படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆகும்.

அப்படி தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை முதலில் பார்த்தால் ஒரு காட்டில், மரத்தடியில் சிங்கம் ஒன்று நிற்பது போல தெரியும். நாம் மேலோட்டமாக பார்க்கும் போது இப்படி தான் தெரியும். ஆனால் இந்த படத்தை இன்னும் உற்று பார்த்தீர்கள் என்றால், எண்ணற்ற சிங்கங்கள் இருப்பது தெரியும்..

எத்தனை சிங்கங்கள் உள்ளன?

படத்தை பாருங்கள் புரியும்.. அட ஆமா.. படத்தில் மேலும் பல சிங்கங்களில் முகங்கள் தெரிகின்றது என்று.. ஆம் படத்தில் நிறைய சிங்கங்கள் இருப்பது போல் இருக்கிறது அல்லவா.. அப்படி எத்தனை சிங்கங்கள் இருக்கின்றன? என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்..

என்ன போட்டிக்கு தயாரா? 7 செகண்டில் சரியான விடையை சொன்னால், நீங்கள் லட்சத்தில் ஒருவர் தான்.. ஏனென்றால் இதற்கான சரியான விடையை 7 செகண்டுக்குள் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவால் நிறைந்தது எனவும், அதையும் மீறி கண்டுபிடிப்பவர்கள் அதிக கவனிப்புத் திறன் கொண்டவர் தான்..

சரியான விடை என்ன?

சரி.. உங்களுக்கான டைம் தொடங்கியது.. 1.. 2.. 3.. ..7. ஓகே டைம் ஓவர்.. 7 செகண்டில் எத்தனை சிங்கங்கள் இருக்கின்றன என சரியான விடையை சொன்னவர்களுக்கு பாராட்டுக்கள். உண்மையிலேயே நீங்கள் லட்சத்தில் ஒருவர் தான்.. ஆனால் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என சொல்பவர்கள் கூடுதலாக டைம் எடுத்துக்கொண்டு தேடிப்பாருங்கள்..

அது சரி.. விடையை சொன்னால் தானே சரியா? இல்லையா? என்று சொல்ல முடியும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.. விடையை சொல்லி விடுகிறோம்.. இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

optical-illusion-how-many-lions-can-you-spot-in-this-image-only-1-in-a-million-can-do-it

7 செகண்டுக்குள் 14 சிங்கங்கள் படத்தில் உள்ளன என சரியாக கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் கமெண்ட் செய்யுங்கள்.. இந்த படத்தில் விடையை கண்டுபிடிக்க எளிதாக இருந்தது என்றாலும் கமெண்ட் செய்யுங்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+