படத்தில் ”முயல்” எங்கே இருக்கு? 5 செகண்ட் மட்டுமே டைம்.. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) படத்தில் முயல் குட்டி ஒன்று உள்ளது. இந்த முயல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 5 செகண்டுக்குள் விடையை சொல்ல வேண்டும். சரியாக விடையை சொல்பவர்கள் ஜீனியஸ். உங்களால் முடிகின்றதா என்று முயற்சி செய்து பாருங்கள். ஜாலியான ஒரு விளையாட்டு தான் இது.

ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. வேலை நேரத்தில் களைப்பாகி சற்று ரிலாக்ஸ் ஆகும் இணையவாசிகள் பலரும் தங்கள் மூளை சுறுசுறுப்பிற்கு இது போன்ற இல்யூஷன் படங்களை பார்த்து அதற்கு விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர்.

optical illusion offbeat trend

ஆப்டிகல் இல்யூஷன் படம்

இது மட்டும் இன்றி தங்களால் விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பார்க்கிறார்கள். தன்னால் விடையை கண்டுபிடிக்க முடியுதோ, இல்லையோ தன் நண்பர்களால் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என அவர்களுக்கும் அனுப்பி வைத்து அவர்களது புத்திக்கூர்மையினையும் சோதித்து விடுகிறார்கள். இப்படியாக ஜாலியாக இந்த படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க ஒரு சில நேரங்களில் எளிமையாக இருந்தாலும், ஒரு சில நேரம் விடையை கண்டுபிடிக்க முடியாமல் மூளையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு யோசிக்க வைத்துவிடும். அப்படித்தான் இன்று ஒரு இல்யூஷன் படம் அதிகம் பேரால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

முயல் எங்கே இருக்கிறது?

இந்த இல்யூஷன் படத்தை பார்த்தோம் என்றால், இதில் முயல் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடப்பட்டுள்ளது. அதுவும் 5 செகண்ட் டைமுக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டுமாம்.. என்ன போட்டிக்கு தயாரா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது.. 1.. 2.. 3.. 4.. 5. ஓகே டைம் ஓவர். உங்களுக்கான நேரம் முடிந்தது.

முயல் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்து விட்டீர்களா?. 5 செகண்டில் கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் நீங்க ஜீனியஸ் தான்.. உங்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் புத்திக்கூர்மை அபாரமாக உள்ளது. ஆனால் 5 செகண்டுக்குள் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள் வருத்தப்பட வேண்டாம். இன்னும் கூடுதல் நேரம் எடுத்து மீண்டும் முயற்சி செய்தால் விடையை கண்டுபிடித்துவிட முடியும்.

விடை இது தான்

அப்படியும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்களுக்கு இங்கே ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது முயல் கீழே எங்கோ சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று பார்த்தால் விடையை கண்டுபிடித்திட முடியாது. படத்தில் மேல் பகுதியில் பார்க்கவும். குறிப்பாக வானத்தில் மேகங்களை பாருங்கள்.

இப்போது பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். விடையை சரியாக கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். இங்கே மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் முயல் இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+