Optical Illusion: உங்கள் மூளைக்கு சேலஞ்ச்.. படத்தில் எந்த கிளாஸ் முதலில் நிரம்பும்.. 6 செகண்டில் கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) படங்களை போல ஆப்டிகல் புதிர் படங்களுக்கும் விடையளிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். அந்த வகையில் உங்கள் மூளைக்கு சேலஞ்ச் அளிக்கும் வகையில் ஒரு புதிர் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரிசையாக 7 கிளாஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த கிளாஸ் முதலில் நிரம்பும்? என்று கண்டுபிடிக்க வேண்டும்... அதுவும் 6 செகண்டிற்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும். சவாலுக்கு ரெடியா?

ஆப்டிகல் இல்யூஷன் படம் பலரையும் திண்டாட வைத்து வருகிறது. இதில் மறைந்து இருக்கும் ட்ரிக்ஸான விஷயங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சவால் அளிக்கப்படுவதால், பலரும் திணறுகிறார்கள். ஆனால் சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்களே, அதுபோல அடிக்கடி இதுபோன்ற படங்களை பார்த்து வருபவர்கள் டக்கென விடையை கண்டுபிடித்துவிடுவார்கள்.

optical-illusion-only-geniuses-can-guess-which-glass-fills-first-can-you-solve-it-in-6-seconds

ஆப்டிகல் புதிர் படங்கள்

ஒருவரது கவனிப்புத் திறன், சிந்தனைத் திறன் போன்றவற்றை அறிந்துகொள்ளவும் இதுபோன்ற இல்யூஷன் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலும் குறிப்பாக ஆப்டிகல் புதிர் படங்களை அரசு போட்டித் தேர்வுகளிலும் கூட கேட்கப்படுகின்றன. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் கூட இவ்வாறான படங்களை பார்த்து பயிற்சி பெறுகிறார்கள்.

ஒருசில இல்யூஷன் படங்களில் விடையை கண்டுபிடிக்கவே முடியாது என்ற வகையில் கொடுக்கப்பட்டிருக்கும். மூளையை கசக்கி பிழிய வைக்கும் வகையில் அமைந்திருப்பதால் எப்படியாவது விடையை கண்டுபிடித்திட வேண்டும் என பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த மாதிரி இன்றும் ஒரு ஆப்டிகல் புதிர் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த கிளாஸ் முதலில் நிரம்பும்?

இந்த புகைப்படத்தை பார்த்தோம் என்றால் கீழே வரிசையாக 7 கிளாஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலே ஒரு அமைப்பு மாதிரி கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பைப்பும் ஒரு கிளாஸுக்கு செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலே ஒரு ஜாடியில் கலர் தண்ணீர் ஊற்றப்படுகிறது. இப்படித்தான் இந்த படமானது கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கேள்வி என்னவென்றால், ஜாடியில் இருந்து ஊற்றப்படும் தண்ணீரானது எந்த கிளாஸிற்கு சென்று வேகமாக முதலில் நிரம்பும். அதாவது கீழே உள்ள 7 கிளாஸ்களில் முதலில் எந்த கிளாஸ் நிரம்பும் என்பது தான் கேள்வி... அதுவும் 6 செகண்டில் விடையை சொல்ல வேண்டும். என்ன, போட்டிக்கு ரெடியா?.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்...

சரியான விடை என்ன?

1.. 2.. 3.. ...6. ஓகே டைம் ஓவர். என்ன விடையை கண்டுபிடிக்க முடிந்ததா?.. சரியான விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் மூளைக்கு சேலஞ்ச் கொடுக்கும் வகையில் இந்த படமானது கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு இப்போது தெளிவாக தெரிந்து இருக்கும். ஏனென்றால் ஒரு சிலர் ஜாடியில் இருந்து கிளாஸுக்கு வரும் பைப்களில் சில பைப்கள் அடைக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரிந்து இருக்கும்.

அதனாலேயே பலராலும் 6 செகண்டுக்குள் விடையை கண்டுபிடிக்க முடியாமல் திணறியிருப்பார்கள். இந்த சின்ன டிரிக்ஸை புரிந்துகொண்டவர்கள் டக்கென விடையை கண்டுபிடித்திருப்பார்கள். சரி இப்போது நன்கு கவனித்து பார்த்து சரியான விடை என்ன என்பதை சொல்லுங்கள்... அதாவது எந்த கிளாஸ் முதலில் நிரம்பும் என்பதை கமெண்டில் பதிவிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+