குழந்தைகளுக்காக சண்டை போடும் 3 பெண்கள்.. உண்மையான "அம்மா" யார்? கண்டுபிடிச்சா கில்லி தான்
சென்னை: அறிவுத்திறனை சோதித்து பார்க்க கூடிய புதிர் படம் ஒன்றைத்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்... இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குழந்தைகளின் உண்மையான அம்மா யார் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால்.. 10 செகண்டில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போலவே Puzzle எனப்படும் புதிர் படங்களும் இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகின்றன. ஒருவரின் புத்திகூர்மை, அறிவாற்றல், சிந்தனை திறன் ஆகியவற்றை சோதித்து பார்க்கும் விதமாக இந்த புதிர் படங்கள் இருப்பதால் நெட்டிசன்கள் ஆர்வமுடன் இந்த புதிர்களுக்கான விடையை கண்டுபிடித்து தங்கள் அறிவாற்றலை சோதித்துக் கொள்கிறார்கள்.

புதிர் படங்களை பொறுத்தவரை ஒரு சில போட்டி தேர்வுகளுக்கு கூட வைப்பதாக சொல்லப்படுகிறது. இந்த புதிர்களுக்கான விடையை கண்டுபிடித்தவர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும் பகிர்ந்து விடையை கண்டுபிடிக்க்குமாறு சவால் விடுப்பதை பார்க்க முடிகிறது. அப்படியாக இதுபோன புதிர் படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. அந்த வகையில், இன்று நாம் பார்க்க இருக்கும் புதிர் படம் சற்று வித்தியாசமானது.
அதாவது ஒரு இடத்தில் விளையாடிக்கொண்டு இருக்கும் இரட்டை குழந்தைகளுக்கு மூன்று பெண்கள் வந்து எனது குழந்தைகள் தான் உரிமை கொண்டாடுகிறார்கள். இந்த குழந்தைகளின் உண்மையான அம்மா யார் என்பதை கண்டுபிடித்து சொல்வதே உங்களுக்கான டாஸ்க்... அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்ன சவாலுக்கு ரெடியா..
படத்தில் குழந்தையின் உண்மையான அம்மாவை கண்டுபிடிக்க சில குறியீடுகள் இருக்கின்றன. அதை கண்டுபிடித்து 10 செகண்டில் ஈசியாக விடையை கண்டுபிடிக்கலாம்.. டைம் ஸ்டார்ட்..1,2,3,4,......10 ஒகே டைம் ஓவர்.. உங்களுக்கான நேரம் முடிந்தது. புதிருக்கான விடையை உங்களில் பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்றே நம்புகிறோம். 10 செகண்டில் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் ஜீனியஸ்தான்..
உங்கள் அறிவாற்றல் வேற வெலலில் உள்ளது. சரி விடையை கண்டுபிடிக்கவே முடியலயே எப்படி கண்டுபிடிப்பது என யோசிக்கிறீங்களா.. சில டிப்ஸ் கொடுக்கிறோம்.. இதை வச்சி கண்டுபிடிங்க பார்க்கலாம்.. குழந்தைகளுக்கு உரிமை கொண்டாடும் பெண்களில் ஒரு பெண் மட்டுமே குழந்தைகளை அக்கறையோடு பார்க்க வந்து இருக்கிறார்... அதாவது குழந்தைக்கு பிடித்தவற்றை கொண்டு வந்து இருக்கிறார்..
அந்தபெண் யார்னு கண்டுபிடிங்க.. விடை உங்கள் கையில் இருக்கும்.. அட இன்னும் படத்திற்கான விடையை கண்டுபிடிக்கவில்லையா... கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதுதான் படத்திற்கான விடை.. அந்த பெண் தனது இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து இரண்டு ஐஸ்கீரிம்கள் வாங்கி வந்து இருக்கிறார்.. விடைக்கான குறியீடு ஆகும்.













Click it and Unblock the Notifications