90% பேர் விடையை தப்பா தான் சொல்லியிருக்காங்க.. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா பாருங்க?
சென்னை: விவசாயி ஒருவர் மாடு ஒன்றை 800 ரூபாய் கொடுத்து வாங்குகிறார். அந்த மாட்டை 1000-க்கு விற்பனை செய்கிறார்... பின்னர் மீண்டும் அந்த மாட்டை 1,100 க்கு வாங்கி, 1,300 க்கு விற்பனை செய்கிறார் என்றால், மாடு விற்பனை செய்ததன் மூலம் அந்த விவசாயிக்கு கிடைத்த லாபம் எவ்வளவு? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போலவே தற்போது புதிர் படங்களும் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. பள்ளிக் கூடங்களில் படித்த எளிய கூட்டல், பெருக்கல் கணக்குகளை கொஞ்சம் டிரிக்ஸ் வைத்து மூளைக்கு வேலை வைக்கும் விதமாக இந்த புதிர் படங்கள் அமைந்துள்ளன. இதனால் பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் விடையை கண்டுபிடிக்க சற்று வித்தியாசமாக யோசிக்க வேண்டியிருக்கும்.

மத்திய மாநில அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் கூட இந்த மாதிரியான புதிர்கள் அதிகம் கேட்கப்படுகின்றன. நம் சிந்தனை திறன்.. பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் வகையிலான இத்தகைய புதிர் படங்கள், பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கும் விதமாக இருப்பதால் இணையத்தில் ஓய்வு நேரத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்து இருப்பதால் ஆர்வத்துடன் பலரும் இந்த புதிர்களை தங்கள் நட்பு வட்டாரத்திற்கு பகிர்கிறார்கள்.
இன்னும் சிலரோ தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு விடையை நான் கண்டுபிடித்து விட்டேன்... உங்களால கண்டுபிடிக்க முடியுமா? சவால் விட்டு அவர்களின் அறிவுத்திறனையும் ஜாலியாக டெஸ்ட் செய்து பார்க்கிறார்கள். இப்படியாக இணையத்தில் இந்த படங்கள் தற்போது வைரல் ஹிட் அடித்து வருகின்றன. மூளைக்கு சவால் விடுக்கும் ஒரு புதிர் கணக்கு ஒன்றைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.
விவசாயி ஒருவர் மாடு ஒன்றை 800 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்.
அந்த மாட்டை 1000-க்கு விற்பனை செய்கிறார்... பின்னர் மீண்டும் அந்த மாட்டை 1,100 க்கு வாங்கி, 1,300 க்கு விற்பனை செய்கிறார். இப்போது, மாடு விற்பனை செய்ததன் மூலம் அந்த விவசாயிக்கு கிடைத்த லாபம் எவ்வளவு? இதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்... 30 செகண்ட் டைம் கண்டுபிடித்து விடையை சொல்லுங்கள் பார்க்கலாம்...
1,2,3,..... 30 ஓகே உங்களுக்கனா டைம் முடிந்தது. பலரும் இதற்கான விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம். படத்திற்கான விடை 400... சரியாக கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுக்கள்.. சரி 400 என்கிறீர்களே எப்படி என சிலர் நினைப்பது புரிகிறது.. 400 எப்படி வந்தது என்று கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது..

* கறவை மாடு ஒன்றை 800 ரூபாய்க்கு வாங்குகிறார்
* 1,000-க்கு விற்பனை செய்கிறார்
* தற்போது கிடைத்த லாபம்: 200
* மீண்டும் பசுமாட்டை 1,100 கொடுத்து வாங்குகிறார்
* தற்போது நீங்கள் 900 செலவு செய்துள்ளீர்கள்
* மீண்டும் அந்த பசுமாட்டை 1,300 க்கு விற்பனை செய்கிறீர்க்ள்
* மொத்த லாபம் = 400












Click it and Unblock the Notifications