படத்தில் முதலில் தெரிவது என்ன?.. பூனையா? தீவா? உங்க கேரக்டர் எப்படின்னு தெரிஞ்சுக்க சூப்பர் டிப்ஸ்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்த்த உடன் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள்.. அதை வைத்தே உங்கள் கேரக்டர் எப்படி இருக்கும் என்று கண்டுபிடித்து விடலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் மிக்கதாக உள்ளதால், பலரும் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் குழுவிற்குள் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுப்பது, அது தொடர்பான அரட்டைகளில் ஈடுபடுகின்றனர். நமது கண்களை குழப்புவதோடு முதலில் நாம் பார்ப்பது ஒன்றாகவும் உற்று பார்த்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும் இல்யூஷன் படங்கள் நமது புத்திக்கூர்மையையும் சோதிப்பவை. இதனால், பலரும் யார் புத்திசாலி என்ற போட்டியில் இல்யூஷன் படங்களை தீவிரமாக அலசி ஆராயத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை படத்தை நாம் பார்க்கும் கோணத்திற்கு ஏற்பவும் சில நேரங்களில் தெரியும். அதாவது, ஆப்டிகல் இல்யூஷன் படத்தை நாம் எப்படி பார்க்கிறோம், எந்த கோணத்தில் பார்க்கிறோம், படத்தை பார்த்த உடன் நமக்கு என்ன சிந்தனை தோன்றுகிறது சிந்தனை திறன் எப்படி செயல்படுகிறது என்பதை பொருத்து தான் ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்குள் மறைந்திருக்கும் விடையை கண்டறிய முடியும். இல்யூஷன் படங்களை வைத்து சில நேரங்களில் ஒருவரின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பதைக் கூட ஓரளவு கணித்து விடலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
அந்த வகையில் உங்கள் கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஆப்டிகல் இல்யூஷன் ஒன்றை இங்கே பார்க்கலாம். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் மியா யிலின் இந்த இல்யூஷன் படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் முதலில் நன்றாக பாருங்கள்.. உங்கள் கண்ணுக்கு முதலில் தெரிந்தது பூனையா அல்லது கடல் தீவா என்பதை சொல்லுங்கள்...அதை வைத்து நெருக்கடியான நெரத்தில் உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
முதலில் தீவு தெரிந்தால்: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் உங்கள் கண்ணுக்கு முதலில் தீவு தெரிந்தால்.. நீங்கள் அதிக சென்சிட்டிவ் ஆன நபராக இருக்கக்கூடும். வெளியில் செல்வதை அதிகம் விரும்பக்கூடியவர். தனியாக இருப்பது அதிகம் பிடிக்காது. நண்பர்களுடன் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. நெருக்கடியான நேரத்திலும் மன அழுத்தத்துடனும் இருக்கும் போது முடிவு எடுக்க கொஞ்சம் தடுமாற்றம் இருக்கலாமாம். இந்த தகவல்களை மியா யிலின் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பூனை தெரிந்தால்: இந்த படத்தை பார்த்தவுடன் என் கண்ணுக்கு பூனை தான் முதலில் தெரிந்தது... தீவு இருக்கிறது என்பது சொன்ன பிறகுதான் தெரிந்தது என்றோ அல்லது அப்படி ஒன்று இருப்பதே எனக்கு முதலில் தெரியவில்லை என்று சொல்பவர்களா.. நீங்கள்... அப்போ உங்க கேரக்டர் இப்படியெல்லாம் கூட இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.. பூனைதான் முதலில் தெரிந்தது என்றால்... பிறர் மீது ரொம்ப அரிதாகவே நீங்கள் கோபப்படும் நபராக இருக்கலாம். உங்களுக்கு மிகவும் அசவுகரியமாக உணர்ந்தாலும் கூட அதை உங்கள் சிரிப்பின் மூலம் சமாளித்து விடுவீர்கள்.
பெரும்பாலும் மோதல்கள் வருவதை தவிர்க்கும் நபராக நீங்கள் இருக்கக்கூடும். ஆனாலும், ஒரு லிமிட்டை தாண்டி உங்களுக்கு யாரேனும் அதிகம் தொந்தரவு கொடுத்தால் உங்கள் கோபத்தை உங்களாலே கட்டுப்படுத்த முடியாது. மிகுந்த முதிர்ச்சி மிக்க நபராகவும் ஒரு விஷயத்தை அடுத்தவர் கோணத்தில் இருந்தும் அணுகும் நபராக இருப்பீர்கள். தேவைப்பட்டால் உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள தயங்க மாட்டீர்கள்.












Click it and Unblock the Notifications