கிளிகளுக்கு மத்தியில் ”பச்சோந்தி” எங்கே இருக்கு? 10 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஒளியியல் மாயை படத்தில் கிளிகளுக்கு மத்தியில் பச்சோந்தி ஒன்று மறைந்து இருக்கிறது. இந்த படத்தில் பச்சோந்தி எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். அதுவும் 10 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால், நீங்கள் தான் கிங். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்று சொல்லப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் தற்போது அதிகமாக இணையத்தில் பரவி வருகிறது. கண்களை ஏமாற்றும் வகையில் இந்த படங்கள் இருப்பதால், பலரும் ஆர்வத்துடன் இந்த புகைப்படங்களை பார்த்து, தங்களால் விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கின்றனர்.

optical illusion offbeat trend

ஒருவரது கவனிப்புத் திறன், சிந்திக்கும் திறனை இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மூலமாக கண்டுபிடித்துவிடலாம். ஒருவர் அந்த படத்தை எந்த கோணத்தில் பார்க்கின்றார், விடையை கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பதை வைத்து அவரது கவனிப்புத்திறனானது கண்டுபிடிக்கப் படுகிறது. அந்த வகையில் இன்று பலருக்கும் சவால் அளிக்கும் வகையில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த இல்யூஷன் புகைப்படத்தில் பல வண்ண நிறங்களில் கிளிகள் கூட்டமாக உள்ளன. இப்படி பல கிளிகளுக்கு மத்தியில் தான் பச்சோந்தி ஒன்றும் உள்ளது. அந்த பச்சோந்தி எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிக்க வேண்டும். மறைந்திருக்கும் விடையை உங்களால் 10 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்யுங்கள். 10 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலிதான்.

சரி வாருங்கள்.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.. 2.. 3.... 10. ஓக்கே டைம் ஓவர். 10 செகண்டிற்குள் உங்களால் விடையை கண்டுபிடிக்க முடிந்ததா?.. குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் அதிபுத்திசாலி தான். உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது. எந்த ஒரு வேலையையும் குறித்த நேரத்திற்குள் முடிக்கும் திறன் பெற்றவர்களாக இருப்பீர்கள்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் விடையை கண்டுபிடிக்கவில்லை என்றால் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். மீண்டும் ஒருமுறை கொடுக்கப்பட்ட புகைப்படத்தை நன்கு உற்று கவனியுங்கள். பச்சோந்தியானது இருக்கும் இடத்துக்கு ஏற்றார் போல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும். எனவே கிளிகள் போன்றே பல வண்ணங்களில் அந்த பச்சோந்தி மறைந்துள்ளது. எனவே அந்த கோணத்தில் தேடுங்கள்.

இப்போது உங்கள் கண்களுக்கு பச்சோந்தி இருக்கும் இடம் தெரிந்து இருக்கும் என்று நம்புகின்றோம். அப்படியும் தெரியவில்லையே என்பவர்களுக்காக ஒரு க்ளு கொடுக்கிறோம். அதாவது, படத்தின் அடிப்பகுதியில் வலதுபுறத்தில் மட்டும் பாருங்கள். நிறங்கள் கிளி போன்று இருந்தாலும், பச்சோந்தியின் கண்களை வைத்து நீங்கள் விடையை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

இப்போது 100க்கு 99 பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மீதம் உள்ள ஒரு சதவீதத்தினருக்காக பச்சோந்தி எங்கே உள்ளது என்பதை குறிப்பிட்டு காட்டும் வகையிலான படமானது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

optical illusion offbeat trend
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+