உங்க கண்களுக்கு சேலஞ்ச்! படத்தில் கிளி எங்கே இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்.. அதுவும் 8 செகண்டில்
சென்னை: நம் கண்களுக்கு சவால் அளிக்கும் வகையில், இங்கே ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் நம் கண்களை ஏமாற்றும் வகையில், கிளி ஒன்று மறைந்து இருக்கிறது. அந்த கிளி எங்கே இருக்கிறது என்பதை 8 செகண்டுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் நம் கண்களை ஏமாற்றக் கூடியது. படத்தில் இரண்டு வகையான தோற்றங்கள் தெரியும். மேலோட்டமாக நாம் பார்க்கும் போது ஒருவித தோற்றமும், அதே சற்று கூர்ந்து பார்த்தால் வேறு விதமாகவும் தெரியும். இதனாலேயே இதற்கான விடையை கண்டுபிடிக்க பலரும் திணறி வருகிறார்கள்.

அப்படி நம் கண்களை ஏமாற்றும் வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் இணையத்தில் வட்டமடித்து வருகிறது. அதாவது படத்தில் கிளி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். படத்தை முதலில் பார்க்கும்போது, மேஜை ஒன்றும் அதன் மேல் சில பொருட்களும், ஜாடிகளும் உள்ளன.
படம் முழுவதும் தேடிப்பார்த்துவிட்டோம் ஆனால் இங்கு கிளி உள்ளது போல் தெரியவில்லையே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இது தான் இன்றைய சவால். உங்களால் 8 செகண்டுக்குள் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என்று பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கியது. என்ன சவாலுக்கு ரெடியா?.. 1.. 2.. 3.. .. 8. ஓக்கே நேரம் முடிந்தது.
படத்தில் கிளி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டீர்களா.. குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். 8 செகண்டெல்லாம் தேவையில்லை, 5 செகண்டுக்குள்ளே படத்தில் மறைந்திருந்த கிளியை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்பவர்கள் கில்லி தான்.. ஆனால் இந்த படத்தில் கிளி இருப்பது போலவே தெரியவில்லை என்பவர்கள் மீண்டும் ஒருமுறை படத்தை பாருங்கள்.
ஆனால் இப்போதும் படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். படத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப்பாருங்கள் என்று சொல்லமாட்டோம். படத்தின் செண்டரில் தான் கிளி இருக்கிறது. எனவே அங்கு மட்டும் கூடுதல் போக்கசுடன் தேடிப்பாருங்கள். இப்போது ஒருசிலர் கண்டுபிடித்து இருப்பீர்கள்.

ஆனால் இன்னும் சிலர் அப்படி ஒன்றும் தெரியவில்லையே என்று நினைப்பது புரிகின்றது. அதாவது படத்தில் கிளி பச்சை நிறத்தில் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். படத்தில் கிளி போன்ற உருவம் இருக்கிறதா என தேடிப்பாருங்கள். இப்போது கிட்டத்தட்ட 99 சதவிகிதத்தினர் கண்டுபிடித்து இருப்பீர்கள். அப்படியும் விடை தெரியாதவர்கள், இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications