‛ஆரஞ்ச் அலர்ட்’.. தமிழகத்தில் நாளை முதல் 2 நாள் கொட்டப்போகும் மிக கனமழை.. மக்களே உஷார்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் மிக கனமழை பெய்ய உள்ளதாக கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இந்த நாளில் 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தமட்டில் சென்னையில் அதிகமாக பெய்தது. ஆனால் பிற மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இந்நிலையில் தான் வடகிழக்கு பருவமழையை மக்கள் நம்பி உள்ளனர்.

வடகிழக்கு பருவமழையும் கூட தற்போது வரை குறைந்த அளவில் தான் பெய்துள்ளது. அதாவது அக்டோபர் மாதம் 30ம் தேதி முதல் நேற்று வரை பெய்ய வேண்டிய மழையில் 16 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது பல மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு ‛ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
வானிலையை பொறுத்தமட்டில் ஒவ்வொரு நிறத்தில் மழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால் ரெட் அலர்ட்டுக்கு முந்தைய எச்சரிக்கையாக கருதப்படும். ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருந்தால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படும். அதேபோல் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதன்படி தற்போது தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாளை மற்றும் நாளை மறுநாள் என இந்த 2 நாட்கள் தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை பல இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நவம்பர் 22(நாளை) மற்றும் நவம்பர் 23 (நாளை மறுநாள்) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 2 நாட்களும் கன முதல் மிக கனமழை (115.6 முதல் 204.4 மில்லிமீட்டர்) பெய்ய வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கும் நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்











Click it and Unblock the Notifications