இவர் இல்லாமல் மீம்ஸ் இல்லை.. கலக்கும் "நைஜீரிய வடிவேல்" ஒசிதாவுக்கு பிறந்தநாள்!
சென்னை: மீம்ஸ்களில் கலக்கும் நைஜீரிய நடிகர் ஒசிதா இஹேமேவுக்கு இன்று பிறந்தநாள்... தமிழகத்தில் நம்ம வைகை புயல் வடிவேல் எப்படி பிரபலமோ அது போல் இவரும் அந்த நாட்டில் மிகவும் பிரபலம்.
கவுண்டமணி, செந்தில் காம்போவுக்கு இன்று வரை ரசிகர் பட்டாளம் உண்டு. நகைச்சுவை சேனல்களில் இவர்களது காட்சிகளை எத்தனை தடவை போட்டாலும் சிரிக்காமல் இருக்கவே முடியாது.
இவர்கள் காலத்திலேயே புகழ்பெற்றவர் வைகை புயல் வடிவேல். இவரது உடல்மொழியை பார்த்தாலே தியேட்டர்களில் அப்லாஸ் அள்ளும்.

மீம்ஸ்கள்
இவரது காமெடிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் இல்லாத மீம்ஸ்களே இல்லை எனும் அளவுக்கு இவரது புகழ் வானுயர்ந்து உள்ளது. இவரை போல் நைஜீரியாவிலும் ஒரு நடிகர் உள்ளார். இவரது பெயர் ஒசிதா இஹேமே. 38 வயதான இவர் நைஜீரிய மொழி படங்களில் சிறந்த காமெடியன் ஆவார்.

நைஜீரிய நடிகர்
இவர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். மிகவும் பிரபல நடிகர்களில் இவரும் ஒருவராவார். கடந்த 2007ஆம் ஆண்டு அதாவது 24 வயதில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை பெற்றுள்ளார் என்றால் அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பாருங்கள். இவர் நடித்த அகி நா உக்வா என்ற படம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

குழந்தை நட்சத்திரம்
ஆப்பிரிக்காவில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்க ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளார். இவ் பிஎஸ்சி கணினி அறிவியல் படித்துள்ளார். லாகோஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் படித்தவர். குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிறந்தநாள்
நைஜீரிய திரைப்பட துறையில் இவருக்கென தனி இடம் உள்ளது. பன்முகத் தன்மை கொண்டதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒகி நா உக்வா படத்தில் இவர் நடித்த கேரக்டர்களை வைத்து நிறைய மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன. சுருக்கமாக சொல்ல போனால் நம் வடிவேலு போல் இவர் இல்லாத மீம்ஸ்களே இல்லை. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒசிதாவுக்கு இன்று 38 ஆவது பிறந்தநாள்... ஹேப்பி பர்த்டே ஒசிதா என நாமும் வாழ்த்துவோம்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications