நம்ம துணை முதல்வர் சமத்துவம் பேசுறாரு.. இன்னொருத்தர்! பவன் கல்யாணை சீண்டி பேசிய பிரகாஷ் ராஜ்
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு என் வாழ்த்துக்கள். நம்ம கிட்ட இருக்கிற துணை முதல்வர் சமத்துவம் பற்றி பேசுகிறார். இன்னொருத்தர் இருக்கிறார்.. அவர் சக்காரத்துல ஒன்ன பேசுகிறார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார். சென்னையில் திருச்சி சிவா எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் இவ்வாறு பேசினார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று திமுக எம்பி திருச்சி சிவா எழுதிய 5 நூல்களின் வெளியீட்டு விழா நடந்தது. எதிர்பாரா திருப்பம், காட்சியும் கருத்தும் என்பது உள்பட 5 புத்தகங்களை திருச்சி சிவா எழுதியிருந்தார். இந்த நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டி ஆர் பாலு மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் திருச்சி சிவா எழுதிய நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அதனை டி ஆர் பாலு பெற்றுக்கொண்டார். இதன்பின்னர் நடிகர் பிராகாஷ் ராஜ் பேசினார். அப்போது அவர் நம்மக்கிட்ட ஒரு துணை முதல்வர் இருக்கிறார். அவர் சமத்துவம் பற்றி பேசுகிறார். இன்னொருத்தர் இருக்கார். அவரோ சக்காரத்துல ஒன்ன பேசுறார். என்று பேசினார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:- எல்லாருக்கும் வணக்கம். ரொம்ப கம்பீரமான மேடை. பேசவே பயமாக இருக்கு. ஏனென்றால் இது அரசியல் குரல் இல்லை. கலைஞனின் குரல். ஆனால் பேசினால் அரசியல் ஆகிவிடுகிறது. கொஞ்சம் கஷ்டம் தான். நிறைய எதிர்த்து பேசுகிறதற்கு. மேடையில் இன்று நான் இப்போது இருப்பதற்கு, திருச்சி சிவா எனது நண்பர் என்பதற்காக அல்ல. அது ஒரு குரல்.
அண்ணா பார்லிமெண்டில் இருக்கிற போது தமிழகத்தின் முதல் குரலில், மெஜாரிட்டி தான் உலகம் என்று சொன்னபோது அவர் சொன்னாராம், மெஜாரிட்டி என்றால் காக்கா தானே தேசிய பறவையாக இருக்க வேண்டும். கலைஞர் இருக்கிற வரைக்கும் என்னை போன்றவர்கள் பேசுவதற்கு அவசியம் இல்லாமல் இருந்தது. நிம்மதியாக இருந்தோம். நமக்காக பேச ஒருவர் இருக்கிறார் என்று. அப்பேற்பட்ட குரலோடு தொடர்ச்சி தான் திருச்சி சிவா.
என்னை வரும்போது சிலர் கேட்டனர். என்ன தைரியமாக பேசுகிறீர்கள் என்று.. நான் சொன்னேன் உண்மையை பேச ஏன் தயங்க வேண்டும் என்று. துணை முதல்வர் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். இங்க நம்மக்கிட்ட துணை முதல்வர் இருக்கிறார். சமத்துவத்தை பற்றி பேசுகிறார். இன்னொருத்தர் இருக்காறு.. அவரோ சக்காரத்துல ஒன்ன பேசுறார். நாங்க எல்லாம் சமத்துவத்தை பேசுறோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஆந்திர துணை முதல்வராக இருக்க கூடிய பவன் கல்யாண், அண்மையில் பேசுகையில், "சனாதன தர்மத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து விடுவர்" என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக சாடியிருந்தார். பவன் கல்யாண் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "பொறுத்திருந்து பார்க்கலாம் ( let's, wait and see)" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications