பெற்றோரை மகிழ்விக்கக் கூடிய பிள்ளையாக இருக்கிறார்.. முதல்வர் சொன்னதுமே உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: களம் நமதே முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அரசியல் குறித்தும் பேசிய முதல்வர், எங்கள் அணியும் இந்திய அணிதான்.. வெற்றிக்காக பாடுபடுகிறோம்.. என்றார்.
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியை பாராட்டி, ரூ.60 லட்சம் ஊக்கத்தொகையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

களம் நமதே முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையே ஒரு புத்துணர்ச்சி பெற்றுள்ளது. பெற்றோரை மகிழ்விக்க கூடிய பிள்ளையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.
விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதியை பாராட்ட கடமை பட்டுள்ளேன். விளையாட்டு போட்டியை நடத்துவோர், விளையாடுவோர் பொறுப்பாக இருக்க வேண்டும். விளையாட்டு துறையின் செயல்பாடுகளை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் விளையாட்டு வீரர்களோடு உதயநிதி இருக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தினோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது தான் முதலமைச்சர் கோப்பை குறித்து அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் கோப்பையில் முன்பு 10 விதமான போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போது 15 விதமான போட்டிகள் நடக்கின்றன. எங்கள் அணியும் இந்திய அணிதான் அந்த அணியின் வெற்றிக்காக பாடுபடுகிறோம்" என்றார்
முன்னதாக, முதல்வர் மு.க ஸ்டாலின் தனது உரையை தொடங்கிய போது, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார். அப்போது பேசுகையில், "விளையாட்டு பிள்ளையாக இருக்கிறாரே என வளர்ந்த பிள்ளையை பார்த்து சில பெற்றோர் நினைப்பதுண்டு...
விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக நம் பிள்ளை சிறப்பாக செயல்படுகிறார் என்று பெற்றவரை மகிழ்விக்கக் கூடியவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்" என்றார். முதல்வர் இப்படி பேசியதுமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டக்கென முதல்வரை பார்த்ததோடு லேசாக புன்முறுவல் செய்தார். விழாவில் இருந்தவர்களும் கை தட்டினர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications