சென்னையில் நான் முதல்வன் திட்ட பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட பயறில் பல்லி.. பேராசிரியர்களுக்கு வாந்தி மயக்கம்
சென்னை: சென்னையில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயறில் பல்லி விழுந்து இருந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் 10- க்கும் அதிகமான உதவி பேராசிரியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் உதவி பேராசியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்ட பயிற்சியில் 3-வது நாளாக இந்த பயிற்சியானது இன்றும் நடைபெற்றது.

இந்த பயிற்சிக்கு நடுவில் உதவி பேராசிரியர்களுக்கு பயறு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பயறை சாப்பிட்ட சிறிது நேரத்தில் உதவி பேராசிரியர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணையில் அங்கு வழங்கப்பட்ட பயறில் பல்லி விழுந்து இருந்தது தெரியவந்தது. 10க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மற்ற உதவி ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications