கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த விருப்ப மனு விநியோகம் மற்றும் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று மாலை முடிவடைந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம், புதுச்சேரியில் சேர்த்து இதுவரை 15,372 பேர் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், மு.க.ஸ்டாலின் தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் எனக்கோரி 1,473 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணைய இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் ஓரிரு வாரங்களுக்குள் தேர்தல் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகின்றன. கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பல்வேறு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

Tamil Nadu Assembly Election 2026 DMK mk stalin

திமுக விருப்ப மனு

இந்த நிலையில், தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறும் பணியை திமுக தொடங்கியது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற்றது. விருப்ப மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் நேற்று (மார்ச் 6) மாலை வரை அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடுவுடன் இந்த செயல்முறை நிறைவடைந்துள்ளது.

15,372 பேர் விருப்ப மனு

இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பெருமளவில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மொத்தமாக 15,372 பேர் திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர். ஆளுங்கட்சியாக உள்ள திமுக சார்பில் இத்தனை அதிக அளவில் விருப்ப மனுக்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. விருப்ப மனு தாக்கல் செய்யும் கடைசி நாளான நேற்று, அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திமுக அமைச்சர்கள்

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகள் தங்களது மனுக்களை சமர்ப்பிக்க வருகை தந்தனர். அந்த நேரத்தில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தை கடந்து வந்து தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கட்டணமும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பப் படிவக் கட்டணமாக ரூபாய் 1,000 வசூலிக்கப்பட்டது.

விருப்ப மனு கட்டணம்

அதேபோல் பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணம் ரூபாய் 25,000 ஆகவும், தனித்தொகுதிக்கான கட்டணம் ரூபாய் 15,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் இந்த தொகையைப் பொருட்படுத்தாமல் பலர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஒரு முக்கிய தகவலாக, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரி 1,473 விருப்ப மனுக்கள் கிடைத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது கட்சிக்குள் அவருக்கான ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

தொகுதி பங்கீட்டு பேச்சு

இதற்குப் பிறகு அடுத்த கட்டமாக கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் செயல்முறை தொடங்கும். அதன்படி மாவட்ட வாரியாக விருப்ப மனு அளித்தவர்களை நேரில் சந்தித்து நேர்காணல் நடத்தும் திட்டம் உள்ளது. இந்த நேர்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்துவார் என்று கூறப்படுகிறது.

வேட்பாளர்களின் பட்டியல்

நேர்காணல் முடிந்ததும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதிச் செய்யப்படும். அதன் பிறகு அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த முறை வேட்பாளர் தேர்வில் இளைஞர்கள் மற்றும் புதிய முகங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக வாரிசுகள்

இது மட்டும் அல்லாமல் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றிய நிர்வாகிகளின் வாரிசுகளும் அதிக அளவில் விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அமைச்சர்களின் வாரிசுகளும் மீண்டும் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். அந்த வகையில் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, அமைச்சர் பெரியசாமியின் மகன் ஐபி செந்தில்குமார், அமைச்சர் ரகுபதியின் மகன் அண்ணாமலை, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+