சென்னையில் கொரோனா.. 6 மண்டலங்களில் மின்னல் வேகத்தில் பரவுகிறது.. வெளியான லிஸ்ட்.
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34245 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 17ம் தேதி காலை நிலவரப்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34245 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18,565 பேர் குணம் அடைந்துள்ளனர்.
15,257 பேர் கொரோனா பாதிப்புடன் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எங்கு அதிகம்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 5486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4370 பேரும், கோடம்பாக்கத்தில் 3648 ஆகவும், தேனாம்பேட்டையில் 4143 ஆகவும், திருவிக நகரில் 3041 ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. அடையாறில் 1931 பேருக்கும், அண்ணா நகரில் 3431 பேருக்கும் வளசரவாக்கத்தில் 1444 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.
திருவெற்றியூர்: 1258
மணலி: 483
மாதவரம் 922
தண்டையார் பேட்டை 4370
இராயபுரம் 5486
திருவிக நகர் 3041
அம்பத்தூர் 1190
அண்ணா நகர் 3431
தேனாம்பேட்டை 4143
கோடம்பாக்கம் 3648
வளசரவாக்கம் 1444
ஆலந்தூர் 699
அடையாறு 1931
பெருங்குடி 646
சோழிங்கநல்லூர் 639
மற்ற மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 914

55 சதவீதம் பேர் குணம்
16.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 55% பேர் (18,565) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது.

எவ்வளவு பாதிப்பு
எங்கு என்ன பாதிப்பு சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34245 பேரில், அதிகபட்சமாக இராயபுரம் மண்டலத்தில் 31296 பேர் குணம் அடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டையில் 2210 பேரும், கோடம்பாக்கத்தில் 2195 பேரும், தேனாம்பேட்டையில் 1955 பேரும், திருவிக நகரில் 1804 பேரும் குணம் அடைந்துள்ளனர். அண்ணாநகரில் 1745 பேரும், அடையாறில் 1036 பேரும், வளசரவாக்கத்தில் 973 பேரும் குணம் அடைந்துள்ளனர். சென்னை மண்டலத்திலேயே அதிகபட்சமாக இராபுரம் மண்டலத்தில் 2111 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் உள்ளார்கள். தண்டையார்பேட்டையில் 2102












Click it and Unblock the Notifications