சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிதிஅமைச்சரே! இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்- ப. சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ. 6000 வழங்கும் என்ற திட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா என நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தலைவரான பிறகு ராகுல்காந்தியின் செயல்பாடுகளில் நிறைய வித்தியாசங்கள் காணப்பட்டுள்ளன. அவரது தேர்தல் யுத்தி, பிரசார யுத்தி ஆகியவற்றால் இந்த லோக்சபா தேர்தலில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் அளிக்கப்படும் என ராகுல் காந்தி ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார்.

ராகுல் வாயில் விஷத்தை ஊற்றணும்.. இருந்தால் சிவனின் அவதாரம்... குஜராத் அமைச்சர் விஷமப் பேச்சு ராகுல் வாயில் விஷத்தை ஊற்றணும்.. இருந்தால் சிவனின் அவதாரம்... குஜராத் அமைச்சர் விஷமப் பேச்சு

5 கோடி குடும்பங்கள்

5 கோடி குடும்பங்கள்

அதன் விவரங்களை நேற்றைய தினம் ராகுல்காந்தி வெளியிட்டார். அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ 6000 வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்தால் 5 கோடி குடும்பங்கள் பயனடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதி

வாக்குறுதி

ஏற்கெனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியோ மாதம் தோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.

டுவிட்டர் பக்கம்

டுவிட்டர் பக்கம்

காங்கிரஸ் கட்சியின் இந்த திட்டத்தை வரவேற்று மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் அருண் ஜேட்லியை கலாய்த்துள்ளார்.

டுவிட்டரில் கேள்வி

அதில் நிதி அமைச்சர் அவர்களே! இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் - ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கான திட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா? என்று தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
P.Chidambaram asks Arun Jaitley about Rahul's announcement on minimum basic income.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X