காங். செயற்குழு உறுப்பினர்கள்... பிரியங்காவுக்கு அடுத்ததாக 16-வது இடத்தில் ப.சிதம்பரம்
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் பிரியங்கா காந்திக்கு அடுத்ததாக 16-வது இடத்தில் ப.சிதம்பரத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் ப. சிதம்பரம். காங்கிரஸ் அரசுகளில் மத்திய நிதி அமைச்சராக, உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் யார் என்கிற விவாதம் வரும் பொழுது ப. சிதம்பரத்தின் பெயரும் அடிபடுவது வழக்கம். இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அக்கட்சியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
காங்கிரஸ் செயற்குழு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செயற்குழுவின் 16 புதிய உறுப்பினர்களை அறிவித்துள்ளார் சோனியா காந்தி.

இதில் மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரத்தின் பெயர் 16-வதாக இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரான பிரியங்கா காந்திக்கு (15வது) அடுத்ததாக ப. சிதம்பரம் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுவரை காங்கிரஸ் செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளராக இருந்தார் ப.சிதம்பரம். தற்போது முழுநேர செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சோனியா காந்திக்கான ஆலோசனை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏகே அந்தோணி, அகமது பட்டேல், அம்பிகா சோனி, கேசி வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications