எக்ஸிட் போல் முடிவுகளை தயாரித்ததே பாஜக தான்.. மோடி, அமித்ஷாவின் பொய் பிரச்சாரம் அம்பலம்: ப.சிதம்பரம்
சென்னை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவால் தயாரிக்கப்பட்டது, பிரதமர் மோடி, அமித் ஷாவின் பொய் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 240 தொகுதிகளில் வென்றது, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மொத்தமாக 292 இடங்களைக் கைப்பற்றியது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எக்ஸிட் போல் கணிப்புகள் பாஜகவால் போலியாக தயாரிக்கப்பட்டவை எனக் குற்றம்சாட்டி உள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம் பேசுகையில், "இந்தியா கூட்டணி அகில இந்திய அளவில் 234 இடங்களை வென்றிருப்பது சாதாரண வெற்றி அல்ல. 400 இடங்களை இலக்கு வைத்திருந்த பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்று உள்ளது. பாஜகவுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
4வது, 5வது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் 300 இடங்களை தாண்டி விட்டோம், 400ஐ நோக்கி பீடுநடை போட்டு வருகிறோம் என்றெல்லாம் பீற்றிக்கொண்டார்கள். அவை எல்லாம் எவ்வளவு பொய்யான பிரச்சாரங்கள் என்பவை இப்போது அம்பலமாகியுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாள்கள் ஆக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். நான் வாக்குப்பதிவு நடைபெற்றபோது பல இடங்களுக்குச் சென்றேன். எந்த கருத்துக்கணிப்பாளர்களிடம் வாக்களித்தவர்களிடம் கருத்து கேட்டதாக எந்த தகவலும் இல்லை.
இருந்தாலும், நாங்கள் இத்தனை லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பு செய்தோம் என கூறி எக்ஸிட் போல் கணிப்புகளை வெளியிட்டனர்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவால் தயாரிக்கப்பட்டது. இதில் 10 கூட்டி, 10 குறைத்து உங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடுங்கள் என்று கூறினர். எல்லா தொலைக்காட்சிகளிலும் 350 - 400 என்ற எண்களை வெளியிட்டு பொய் பிரச்சாரம் செய்தது பாஜக.
அதையெல்லாம் மீறி இன்று பாஜகவுக்கு நாட்டு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்திருக்கிறார்கள். நாளை மறுநாள், பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். மோடி தனது பேச்சில் ஜவஹர்லால் நேருவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறார்.
மோடிக்கு கிடைத்தது, 282, 303, 240 தொகுதிகள் தான். ஆனால், ஜவஹர்லால் நேருவுக்கு கிடைத்த தொகுதிகள் எண்ணிக்கை 361, 374, 364. அவருடன் பிரதமர் மோடி தன்னை ஒப்பிட்டுக்கொள்வதை நாங்கள் நிராகரிக்கிறோம். தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்சனை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications