வஞ்சனை.. ஆமை புகுந்த வீடும், பாஜக புகுந்தால் தமிழ்நாடும் உருப்படாது! வெளுத்து வாங்கிய ப.சிதம்பரம்!
வேலூர்: பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் அக்கட்சி ஆளாத மாநிலங்களுக்கு நிதி தருவதில் வஞ்சனையை செய்கிறது எனவும், ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் நாசமாகிவிடும் என்பார்கள், அதே போல் தமிழகத்தில் பாஜக புகுந்தால் நாடே நாசமாகிவிடும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், தமிழக மக்கள் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் கூட்டணி ஆட்சி என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என அக்கட்சித் தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமித்ஷாவிடம் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக ஆட்சியில் பங்கேற்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆம் என பதிலளித்தார்.

ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை எனக் கூறியிருக்கிறார். இந்நிலையில், ஆமை புகுந்து வீடும், அமீனா புகுந்த வீடும் நாசமாகிவிடும் என்பார்கள், அதே போல் தமிழகத்தில் பாஜக புகுந்தால் நாடே நாசமாகிவிடும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். வேலூர்மாவட்டம், குடியாத்தம் நகரில் காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா,சிதம்பரம் பேசுகையில்," மத்தியில் உள்ள ஆளுங்கட்சியான பாஜக அரசு அரசியல் சாசனப்படி ஆட்சி செய்யவில்லை. மக்களின் வரிப் பணத்தை மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவதில் ஓர வஞ்சனை செய்கிறது பாஜக. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியை வழங்குகிறது. பாஜக ஆட்சியில்லாத தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு நிதி தராமல் வஞ்சிக்கிறது.
பாகிஸ்தானுடன் நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசாமல் ஒவ்வொரு படை தளபதிகளை ஒவ்வொரு பகுதியில் வைத்து என்ன நடந்தது என அவர்கள் கூறுகிறார்கள். நாடாளுமன்றத்தை கூட்டி வெளியுறவுத் துறை அமைச்சரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ ஏன் கூறவில்லை. இவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி உருவாகி சர்ச்சை உருவாகியுள்ளது.
அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்கிறார். அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சி தலைவருமான பழனிசாமியோ அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். எனவே தமிழக மக்கள் இரண்டு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை எத்தனையோ முதல்வர்கள் ஆட்சி நடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதாக கருத வேண்டாம். காமராஜர் ஆட்சி தான் பொற்கால ஆட்சி. அதனை இதுவரையில் யாராலும் செய்ய முடியவில்லை. ஆமை புகுந்து வீடும் அமீனா புகுந்த வீடும் நாசமாகி விடும். அதை போல் தமிழகத்தில் பாஜக புகுந்தால் நாடே நாசமாகிவிடும்" என பேசினார்.












Click it and Unblock the Notifications