"சார்! ஆ ராசாவின் சூத்திரன் கமெண்ட்...".. நிருபர் கேட்ட கேள்விக்கு கேக்கலை கேக்கலைனு சொன்ன அமைச்சர்
சென்னை: இந்துக்கள் பற்றி அ.ராசா பேச்சு குறித்து கேள்வி எழுப்பிய போது அமைச்சர் சேகர் பாபு காது கேட்கவில்லை என்று சைகையில் காண்பித்து சென்றார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

தயாநிதி மாறன்
இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் , முன்னேறுகின்ற மாநிலங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான மாநிலம் என்றால் தமிழ்நாடு தான். இல்லாதவர்களுக்கு இல்லை என்ற சொல் இருக்கக் கூடாது. ஏழை மக்களை வாழ்வை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

தமிழகம்
தமிழ்நாட்டைப் பார்த்து தான் ஒன்றிய அரசு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது. இலவசம் வேண்டாம் என்பவர்கள் வசதி படைத்தவர்களாக உள்ளார்கள். முன்னேறாத மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். முன்னேறும் மாநிலமாக முதல் தரவரிசையில் இருக்கும் தமிழ்நாடு தொடர்ந்து இலவசங்களை வழங்கி திராவிட மாடல் ஆட்சிக்கு உதாரணமாக இருக்கிறது என்றார் தயாநிதி மாறன்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பணி காலத்தில் தான் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் புரிந்தார்கள் அதற்கான பயனைத்தான் தற்போது அனுபவிக்கிறார்கள். ஆ ராசா இந்துக்கள் தொடர்பாக பேசியதற்கு அமைச்சர் சேகர்பாவிடம் கருத்து கேட்டபோது இரண்டு முறை கேள்வி கேட்கப்பட்டும் கேள்வியே தன் காதில் விழவில்லை என சைகையால் காண்பித்து, கைகூப்பி வணங்கி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

நீலகிரி எம்பி ராசா
நீலகிரி எம்பி ஆ ராசா ஒரு விழாவில் பேசுகையில் இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா, இந்துவாக இருக்கும் வகை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விருமபுகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தையும் முறியடிக்கிற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என கடுமையாக விமர்சித்திருந்தார். அவரை எம்பி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications