Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நாஞ்சில் அந்த 7 பேரும்தான்..! தவெகவில் குப்பைத் தொட்டிகள்! விஜய் Ex Manager

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவில் குப்பைத் தொட்டிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நல்ல நிர்வாகத்தை கொடுக்க முடியாது. இவர்கள் எல்லாம் சேர்ந்து நல்லவர்களை வெளியேற்றிவிடுவார்கள் என விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.

PT Selvakumar

தவெக தலைவர் விஜய்க்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக பிஆர்ஓவாக இருந்த பி.டி.செல்வக்குமார், தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அவர் விஜய் மீதும் அக்கட்சியில் இருப்போர் மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

"புலி" திரைப்படம் வெளியாகும் முன்பு எனது வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. இதற்கு காரணமே விஜய்யுடன் இருப்பவர்கள்தான். அவர்கள் யார் என்பதை விஜய் அடையாளம் காண வேண்டும். மகாபாரதத்திற்கு மிகப் பெரிய காரணமே சகுனிதான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயிதான். அதே போல விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது. விஜய்யை சுற்றி நிறைய சகுனிகள் இருக்கிறார்கள் என கடந்த மாதம் செல்வக்குமார் கூறியிருந்தார்.

திமுகவில் இணைந்தார்

இந்த நிலையில் திமுகவில் இணைந்ததும் அண்ணா அறிவாலயத்தில் பி.டி.செல்வக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், நடிகர் விஜய்யுடன் பணியாற்றிய போது அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற எண்ணத்தில் நான் அவருடன் இருந்து கட்டமைத்தேன்.

விஜய் மக்கள் இயக்கம்

கலப்பை மக்கள் இயக்கத்தை நான் எப்படி கட்டமைத்து ஒழுங்காக நடத்தி வருகிறேனோ, அதே போல் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தூணாக இருந்து பணியாற்றியிருக்கிறேன். இதை அவர்களே பல்வேறு தருணங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

புதுசு புதுசா

காலப்போக்கில் நிறைய பேர் தவெகவுக்கு புதுசு புதுசாக உள்ளே வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் எங்களை விடுங்கள், விஜய்யின் அப்பாவாலேயே உள்ளே சென்று செயல்பட முடியவில்லை.

அமாவாசை

எங்களை மாதிரி மனசு ஒத்தவர்கள் அங்கு பயணிக்க முடியாத ஒரு சூழல் வருகிறது. விஜய் நிலவு போல் பவுர்ணமியில் பிரகாசிப்பார். அமாவாசையில் மறைந்து போவார்.

பூர்த்தி செய்வாரா

மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வாரா என்பது எனக்கு தெரியவில்லை. என்னை பொருத்தமட்டில் என் உடல், பொருள், ஆவி என எல்லாவற்றையும் மக்களுக்காக சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

தீயவர்கள்

இதற்கு ஒரு நல்ல கட்டமைப்பு தேவைப்பட்டது. அது இன்றைய சூழலில் திமுக தரப்பில் சிறப்பாக செய்து வருவதால் நான் அதில் இணைந்தேன். விஜய்யை சுற்றி நல்லவர்களும் தீயவர்களும் இருக்கிறார்கள்.

குப்பைத் தொட்டிகள்

இந்த தீய கூட்டம் என்ன செய்யும் என்றால் நல்லவர்களை எப்படியாவது வெளியே தள்ளிவிடுவார்கள். குப்பைத் தொட்டிகளை ஒன்று சேர்க்க பார்ப்பார்கள். குப்பைத் தொட்டிகள் எல்லாம் ஒன்றும் சேரும் போது நல்லதொரு நிர்வாகத்தை கொடுக்க முடியாது.

புகழ் பணம்

என்னதான் புகழ், பணம் என இருந்தாலும் சுற்றியிருப்போர் சரியாக அமையாவிட்டால் அவர்களை வேறு ஒரு திசைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்பதை எனது வாழ்வில் நான் பார்த்துள்ளேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையையும் சுற்றியுள்ளவர்கள் கெடுத்தார்கள்.

அந்த 7 பேர்

பெயரை சொல்ல எனக்கு என்ன பயம் இருக்கிறது, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட்ராமன், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 7 பேர், இவர்கள் எல்லாம் தியாகிகள் கிடையாது. விஜய் ஒரு மாற்றமான அரசியல் கொண்டு வருகிறேன் என சொன்னார்.

விஜய் சொன்னது என்ன

ரசிகர் மன்றத்திற்காக உழைத்தவர்களுக்கு, என் படத்திற்கு போஸ்டர் ஒட்டினவர்களுக்கு, என் கட் அவுட்டுக்கு பால் ஊற்றினவர்களுக்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுத்தேன் என விஜய் தெரிவித்திருந்தார்.

நாஞ்சில் சம்பத் விஜய் ரசிகரா

இன்று புஸ்ஸி ஆனந்த் முதல் நாஞ்சில் சம்பத் வரை விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களா? ரசிகர்களா இருந்து விஜய்க்காக தியாகம் செய்தவர்கள் யாரும் அந்த கட்சியில் நிர்வாகிகளாக இல்லை. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தேன் என்பது பத்திரிகையாளர்களுக்கு தெரியும். நான் அவமானப்படுத்தப்பட்டதால் ஒதுங்கி இருக்க முடியாது. அதனால்தான் திமுகவுக்கு மக்கள் சேவை செய்ய வந்தேன்.

களப்பணி

நான் களத்தில் இறங்கி வேலை செய்பவன், எனக்கு யார் ஒத்துழைப்பு தருகிறார்களோ, ஊக்கப்படுத்துகிறார்களோ அவர்களுடன் நான் பணியாற்றுவேன். கன்னியாகுமரி திமுக நிர்வாகி மகேஷ் என்னை அழைத்தார். ஊக்கப்படுத்துவதாக சொன்னார். அதனால் நான் அவர்களுடன் பயணிக்க முடிவு செய்துவிட்டேன்.

சூரியன் பிரகாசம்

சினிமா துறைக்கு விஜய் உண்மையாக இருந்தாரா என்பதை நான் சொல்லக் கூடாது. நான் அவருடன் இருந்தவன். சினிமா வேறு அரசியல் வேறு. நான் ஏற்கெனவே சொன்னது போல் நிலவு கொஞ்ச நாள்தான், ஆனால் சூரியன் என்றைக்கும் இருக்கும். அதன் பிரகாசம் நம் உடலுக்கும் நல்லது. அதனால்தான் சூரியன் பக்கம் வந்திருக்கிறேன் (திமுகவில் இணைந்ததை சொல்கிறார்). தவெகவில் நிறைய அமாவாசைகள் வருகிறார்கள். நல்லவர்களை வாழ விடமாட்டார்கள். இவ்வாறு செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+