இது எங்க நிலம்.. அடியாட்களுடன் போய் தகராறு செய்த பா.ரஞ்சித் சகோதரர்.. கைமீறி கட்டப்பஞ்சாயத்து
சென்னை; சென்னை மணலி புது நகரில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு நிலப்பிரச்சனை ஒன்றிற்காக கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் பா. ரஞ்சித் சகோதரர் பிரபுதான் இந்த வழக்கில் சிக்கி இருப்பது. ரிஷி என்ற இளைஞர் சென்னை மணாலி புது நகரில் நிலம் ஒன்றை வாங்கி உள்ளார். 2007 ரேவதி என்பவரிடம் இருந்து நிலம் வாங்கினார். 3 பேர் பங்குதாரர்கள் கொண்ட நிலத்தில் 3 பேரிடமும் கையெழுத்து வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் ரேவதி உறவினர் ஷகீலா என்பவர் திடீரென அந்த நிலம் என்னுடையது என்று கூறி பிரச்சனை செய்துள்ளார். அந்த நிலம் எனக்கும் சொந்தம் என்று கூறி மோதல் செய்துள்ளார். இதையடுத்து ரிஷி பதிவுத்துறை அலுவலகத்தில் இது பற்றி புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் தொடர்பாக சென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை ஒரு பக்கம் தீவிரமாக நடக்கும் நிலையில்தான்
மணலி புது நகரில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு இந்த நிலப்பிரச்சனைக்காக கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷகீலா பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபுவை பார்த்து உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு இருவரும் 20 ஆட்களுடன் சேர்ந்து சென்று ரிஷி இருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர். முதலில் சிசிடிவி கேமராவை உடைத்து உள்ளனர். அதன்பின் கற்களை வீசி பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு சரமாரியாக தாக்கி உள்ளார்.
ரிஷி புகார்: ரிஷி தங்கி இருக்கும் இடத்தில் சரமாரியாக தாக்கி கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்த நிலத்தை விட்டுவிடு ஓடி விடு.. இது எங்கள் நிலம் என்று ஷகீலா என்ற அந்த பெண்ணிற்காக கடுமையாக பேசி உள்ளார்.
ரிஷி உறவினர்கள் சிலர் இதில் கடுமையாக காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ரிஷி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆட்கள் கூட்டமாக வந்தனர். எங்கள் மீது சரமாரியாக தாக்கினர். நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் கற்களை வீசி தாக்கினர். நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டாலும் துரத்தி அடித்தனர் என்று கூறி உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணலி புது நகரில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் சகோதரர் பிரபு நிலப்பிரச்சனை ஒன்றிற்காக இப்படி கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரிய விசாரணை செய்து கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணலி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications