"அமைச்சர் ராஜ்மோகன் இதுவரை ஒரு தலித் பிரச்னைக்காவது குரல் கொடுத்தாரா?" இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அமைச்சர் ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியில் நின்றபோது தான் அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது. ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு கூட குரல் கொடுத்ததில்லை." என இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் சிஜேபி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து சென்னை எழும்பூரில் பா ரஞ்சித் தலைமையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பா ரஞ்சித் தவெக அரசு குறித்தும் பட்டியலின அமைச்சர்கள் குறித்தும் கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Pa Ranjith

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) இளைஞர்கள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், சிஜேபி இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், முன்னணி இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், லெனின் பாரதி, அருண் மாதேஸ்வர்ன், பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகைகள் ரேவதி, ஆண்ட்ரியா, நடிகர்கள் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "பாரதிய ஜனதா கட்சி பாசிச கட்சி. அதனால் அது போராட்டத்தை ஒடுக்கதான் செய்யும். ஆனால் தமிழக அரசு ஏன் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குகிறது. மாணவர்களை அடிப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? முதலில் தவெக அமைச்சரவையில் இருக்கும் பட்டியலின அமைச்சர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இன்று வரை ஏன் எந்த தலித் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மறுக்கிறார்கள்? வன்னி அரசு தவிர மீதி 7 தலித் அமைச்சர்கள் என்றைக்காவது தலித் பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார்களா?

முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே சந்தேகமாக உள்ளது. அவர் எழும்பூர் தொகுதியில் நின்றபோது தான் அது அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்கு தெரிந்தது. ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு ஊடகவியலாளராக இருந்துகொண்டு இதுவரை ஒரு தலித் பிரச்சனைக்கு கூட குரல் கொடுத்ததில்லை. உடன் நின்றதில்லை. அவர் அமைச்சர் ஆனால் என்ன? ஆகவில்லையென்றால் என்ன?

சேலம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை திறக்க முடியவில்லை. அம்பேத்கர் உங்கள் கொள்கை தலைவர் தானே.. சேலம் மாவட்டத்தில் திறக்க முடியாத அம்பேத்கர் சிலையை நீங்கள் திறந்து வைக்கலாமே. உங்கள் கொள்கைத் தலைவரை மக்கள் சாதி ரீதியாகப் பார்க்கும்போது ஏன் உங்களுக்கும் கோபம் வரவில்லை? தலித் அமைச்சர்களுக்கும் கோபம் வரவில்லை?

இந்த அரசு என்பதே அதிகாரிகளின் அரசாகச் செயல்படுகிறது. சாதி ரீதியான மத ரீதியான சமரசங்களொடு தான் நீங்கள் ஆட்சி நடத்துவீர்கள் என்று எங்களுக்கு சொல்ல வருகிறீர்களா என்பது தான் எங்களுடைய கேள்வி." என பா.ரஞ்சித் காட்டமாகப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+